May 30, 2010

நஸீஹா

இறுதியில் நாங்கள் அப்பாவின் இடத்திற்கு வந்தபின், பாதுகாவலர் என்னையும், என் தங்கை லைலாவையும் அப்பாவின் இடத்திற்கு அழைத்து சென்றார். எப்பொழுதும் போல அப்பா கதவின் பின் ஒளிந்து, எங்களை பயமுறுத்துவதற்காக காத்துக் கொண்டிருந்தார். நாங்கள் சந்தித்தோம், பின் ஓர் நாளில் எவ்வளவு முடியுமோ அத்தனை அரவணைப்பும், அன்பின் வெளிப்பாடாக முத்தங்களும் பகிரப்பட்டன.

எங்கள் தந்தை எங்களை நன்கு கூர்ந்து கவனித்தார். பின் என்னை அவர் மடியில் அமரச்செய்து என் வாழ்நாளில் எக்கணமும் மறக்க முடியாத ஓர் அறிவுரையை கூறினார். என் கண்களை நேருக்கு நேர் நோக்கி என் தந்தை கூறினார்,
    " ஹன்னா, இவ்வுலகில் மிகவும் விலையுயர்ந்த‌ பொருட்களை இறைவன் மிகவும் பத்திரமான, மறைவான, எளிதில் எவரும் அடையமுடியாத இடங்களில் படைத்துள்ளான். வைரங்களை நீ எங்கே பெறுகிறாய்? நிலத்தினுள் வெகு ஆழத்தில், மறைவான, பாதுகாப்பான இடத்தில். முத்துக்களை எங்கே பெறுகிறாய்? கடலின் அடியில் அழகிய சிற்பிகளை கொண்டு மறைக்கப்ப‌ட்டு, பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து. தங்கத்தை எங்கிருந்து பெறுகிறாய்? சுரங்கங்களில் அடுக்கடுக்காய் பாதுகாப்பளிக்கும் பெரும் பெரும் பாறைகளின் பின்னாலிருந்து. கடின உழைப்பின் மூலம் மட்டுமே அவற்றை நாம் அடைய முடியும்."

பின் என் தந்தை அவரின் கண்களில் தீர்க்கத்தையும் சிரத்தையையும் வெளிப்படுத்தி என்னை நோக்கி கூறினார்,
    " உன்னுடைய உடலும் மிக புனிதமானது, விலைமதிப்பற்றது. நீ வைரங்களையும், முத்துக்களையும் விட விலையுயர்ந்தவள். எனவே நீயும் உன் உடலை போர்த்தி பாதுகாத்து வைக்க வேண்டும்"

இந்த பதிவு தந்தைகளுக்கு மட்டும் அல்ல, தாய்களுக்கும்தான். ஆனால் மிக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இங்கு தந்தையே நேரடியாக பிள்ளைகளிடம், தெளிவாக நேர்மையாக, சுற்றி வளைக்காமல், கோபப்படாமல், அவர்களை மனம் வெறுக்க செய்யாமல் அதே சமயம் அவர்கள் மனதில் என்றென்றைக்கும் மறக்காமல் தங்கக் கூடிய அளவில் அறிவுரை கூறியதுதான். நாமும் நம் பிள்ளைகளிடம் இதேபோல் பேச கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் ஆடைகளைப் பார்த்துவிட்டு தாயிடம் நாம் கோபப்படுகிறேம்,"என்ன விதமான ஆடைகளை உடுத்த நீ அனுமதித்தாய்?" என்றோ அல்லது "இனிமேல் இத்தகைய ஆடைகளை அணிய வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லிவிடு" என்று கூறுகின்றோம். இதனால் பிள்ளைகள் மனதில் என்ன எண்ணம் வருகின்றது? ஆஹா...தந்தை ஒன்றும் சொல்வதில்லை, தாயே பட்டிக்காடாக இருக்கின்றாள், தாய்க்கு நாம் நாகரீகமாக உடை உடுத்துவது பிடிக்கவில்லை என்றுதான் நினைப்பார்கள். இதுவே அவர்களை தாய்க்கு எதிராக திசை திருப்புவதுடன் உண்மையில் ஏன் என்ற காரணத்தை விளங்காமலே போக வைத்துவிடும். அதுவுமன்றி, இஸ்லாத்தில் பிள்ளைகளை சரிவர வளர்க்கும் பொறுப்பு தாய்க்கு மட்டுமன்றி தந்தைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. எனெவே, நாம் ஏன் இதில் தலையிட வேண்டும் என்றோ, தாயே இதை சரி செய்ய வேண்டும் என்றோ நினைக்காமல் தந்தையும் பொறுப்பை சரி வர செய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ், அல்லஹ் நம்மை நல்லதொரு தாயாக, நல்லதொரு தந்தையாக வாழ கிருபை செய்வானாக.

நபிமொழி :
    உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: உமர் (ரலீ)-நூல்: அபூதாவூத் 1412

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பவர்:அனஸ் பின் மாலீக்(ரலீ­)-நூல் : முஸ்­லிம்(5127)

    ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிரி­ருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், '''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திரிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள்.  அறிவிப்பவர்:ஆயிஷா (ர­)-நூல் : புகாரி(1418)

    ''யார் இந்தப் பெண் குழந்தைகளால் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)-நூல் : புகாரி(5995)

மீண்டும் சந்திப்போம்.
அதுவரை தேவை து'ஆ.

May 26, 2010

வாழ்த்துக்கள் ஜாஸ்மின்

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ஜாஸ்மின்,

உன் எண்ணங்கள் யாவும் ஈடேறி, நீ இன்னும் மென்மேலும் உயர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன். வாழ்த்துக்கள்! உனக்கும், உன் தாய் தந்தையர்க்கும்.

வ ஸலாம்.

யார் இந்த ஜாஸ்மின்?
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான ஜாஸ்மின் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:

தமிழ் - 98
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூக அறிவியல் - 98

மொத்தம் - 495

courtesy: http://www.tutyonline.net/view/31_4228/20100526092332.html

May 24, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 2)

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர் ரஹீம்.

கடந்த பதிவில் குழந்தையின் கல்வி என்பது நம் திருமணத்திற்கு முன்பே திட்டமிடப் பட வேண்டியது என்று கூறியிருந்தேன். திருமணமான பின்பும் கணவன் மனைவி எவ்வாறு தம் நற்குணங்களை வளர்த்துக் கொள்ளலாம் என அலசுவோம்.

1. முதலாவதாக தீனை நல்ல முறையில் பேணும் ஆண் (அ) பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆதாரம் 1: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா

ஆதாரம் 2:மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.அபூஹூரைரா (ரலி), திர்மிதி

2. இரண்டாவதாக தங்கள் கணவனைப் பற்றியோ (அ) மனைவியைப் பற்றியோ வெளியிடத்தில் குறை சொல்லாத, காண்பித்துக் கொடுக்காத உறவு வேண்டும்.
ஆதாரம்: அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)

மேற்கண்ட ஆதாரம் ஒரு காரணத்துக்காக மட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்களுக்காக தரப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நபிகளாரின் (ஸல்) வாழ்வையே எடுத்துக் கொள்ளுங்கள். நபியவர்களுக்கு (ஸல்) முதன் முதலில் வஹீ வந்ததும் அவர் தஞ்சமடைந்தது யாரிடம்? சித்தப்பாவிடமோ, உற்ற தோழர்களிடமோ அல்ல, மாறாக, தன் மனைவியிடம், புதிய அனுபவம் ஒன்று கிடைத்ததையும் அதனால் உற்ற பயத்தையும் யாரிடம் பகிர்ந்தார்கள்? தன் மனைவியிடம், இன்னும் கதீஜா (ரலி) அவர்களின் மேன்மையையும் பாருங்கள். தன் கணவர் பொய் கூறுவார் எனவோ, கனவு கண்டிருப்பார் எனவோ ஒரு கணம் கூட சிந்திக்க வில்லை. மாறாக, உண்மை என நம்பினார், அத‌ன் பின் நபியவர்களுக்கு (ஸல்) ஆதரவான சொற்களை கூறினார், பின் இன்னும் மனம் நிம்மதியடைய தன்னுடைய உறவினர், அதுவும் ஞானம் மிக்கவர் என்று கருதப்பட்டவ‌ரிடம் கொண்டு சென்றார். உதாசீனப் படுத்தவில்லை, உண்மையல்ல என ஒரு க்ஷ‌ணம் கூட நினைக்கவில்லை. இத்தகைய ஒரு பாதுகாப்பை திருமண உறவு ஒன்றே தரமுடியும். எனவேதான் அல்லாஹ் த ஆலா, பாதுகாப்பு அளிக்கக் கூடிய, கவசமாய் இருக்கக்கூடிய, உங்கள் இரகசியங்களை மறைக்கக் கூடிய, உங்களுக்கு மதிப்பை தேடி தரக் கூடிய (ஆம், ஆடையில்லா மனிதனுக்கு மதிப்புண்டோ?) ஒரு ஆடையாக திருமண உறவை தேடுங்கள் என்று கூறுகின்றான்.

3. அப் பெண்ணிடத்தில் அழகு இருக்கின்றது, வசதி இருக்கின்றது, இன்னும் மனம் விரும்பியவாறு இருக்கின்றாள் என்றெல்லாம் நினைத்து வேற்று மார்க்கத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம். அல்லாஹ் நாடினால் அவளை இஸ்லாத்திற்கு மாற்றிவிடுவார் என குருட்டம்போக்கு சிந்தனை வேண்டாம்.
ஆதாரம்: இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். (அல் குர்ஆன் 2:221)

இணை வைக்கும் ஒரு பெண்ணை விட இஸ்லாத்தின் பால் நம்பிக்கை கொண்ட அடிமையே மேல் என நபியவர்களும் (ஸல்) வாக்குரைத்திருக்கின்றனர்.
4. நன்னடத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆதாரம்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இந்த ஹதீத் ஆண்களுக்கும் பொருந்தும். எவ்வாறு? ஹலாலான‌ முறையில் பொருளீட்டி குடும்பத்தை ஹலாலான வழியில் மகிழ்ச்சி கொள்ள வைக்க வேண்டும். மேலும் மனைவியிடமும் மற்றவர்களிடமும் நல் முறையில் நடந்து கொள்ள வேண்டும். நல்ல மனைவியும் சில சமயங்களில் வெறுப்பூட்டும்படி நடந்து கொள்வது இயல்பே. ஏனெனில் நாம் எல்லாருமே குற்றம் புரியக் கூடிய, பலவீனமான மனிதர்களே. அவ்வேளைகளிலும் பொறுமையுடன் குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஆணுக்கு உள்ளது.
ஆதாரம் 1: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆதாரம் 2:பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆதாரம் 3: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)

மனைவியை வெறுக்காமல், தன்னிடமும் கோபம் உண்டு என்ற விதத்தில் நடக்க வேண்டும். இன்னும் கவனித்தால், இது போன்ற சண்டை சச்சரவுகள் குழந்தைகளின் மனதில் அழியா சுவடுகளை ஏற்படுத்திவிடும். இன்னும் தாய் தந்தை மேல் மதிப்பையும் நம்பிக்கையையும் குறைத்து விடும். இன்னும் பல விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எதிர்காலத்தில் தாய் தந்தையாய் வழி காட்ட வேண்டிய பொறுப்புள்ளதை எண்ணி, கணவன், மனைவி இருவருமே தத்தம் குணங்களை மேம்படுத்தி வாழ வேண்டும்.

5. திருமணத்திற்கு பிறகும் தாய் தந்தையரை பேண வேண்டும்.தாய் தந்தையை பேணிக் காப்பது எல்லோர் மீதும் கடமையாகின்றது. பெண்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே திருமணத்திற்கு பின்பும் தாய் தந்தையரை பேணிக் காக்க வேண்டும். அனைத்து உறவுகளையும் பேணிக் காப்பவர்களாக இருத்தல் நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய பண்புகளை யாரும் கற்பித்து தராமலே பழகிக் கொள்ளக் கூடிய இனிய சூழலை தரும்.
ஆதாரம் 1: பெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை
நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (லுக்மான்: 14)

ஆதாரம் 2: இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83)

ஆக, நற்குணமுள்ள கணவன் மனைவியே நல்ல குழந்தைகளை, அல்லாஹ்விற்கு பிரியமான செல்வங்களை பெற்றெடுக்கவும், வளர்க்கவும் முடியும். உடனே, இதனை படித்த பின் கணவனிடமோ, மனைவியிடமோ பயான் செய்ய ஆரம்பித்து விடாதீர்கள். முதலில் உங்களை சிறிது சிறிதாக மாற்றுங்கள். பின் உங்கள் செயல்கள் மூலம் மற்றவரிடம் மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். முயன்றால் முடியாதது இல்லை. முயற்சி செய்யுங்கள். அல்லாஹ்வினிடத்தில் அப்படிப்பட்ட குணத்தையும், வாழ்வையும் தர அதிகமதிகம் து'ஆ செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.

தேவை து'ஆ

May 20, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 1)

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர் ரஹீம்.

ஒரு மனிதன் அந்த அறிஞரிடம் வந்து கேட்டான். "அறிஞரே என்னுடைய குழந்தைக்கு எப்பொழுதிலிருந்து மார்க்கத்தை (வாழும் முறையை) கற்றுத்தர ஆரம்பிக்க வேண்டும்?" அறிஞர் கேட்டார்," உன்னுடைய குழந்தைக்கு வயது என்னவாகின்றது?" அந்த மனிதன் கூறினான்,"இரண்டு மாதங்கள் ஆகின்றது" அறிஞர் கூறினார், "அடடா... காலம் கடந்து விட்டது"

May 16, 2010

வீட்டிலேயே குழந்தைகளுக்கு கல்வி தர இயலுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ‌ ரஹ்மத்துல்லாஹ்.

இந்த பதிவு எழுதுவதின் நோக்கம், இந்த வலைப்பூவை எந்த அளவு நீங்கள் உங்கள் வீட்டில் உபயோகிக்கலாம் என்பதுதான். அதிகமாக இஸ்லாமிய கல்வியை போதிக்கும் முறைகளையே இங்கு காண முடியும் என்றாலும் இதே வழிமுறைகளை உபயோகித்தோ அல்லது தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்தோ எல்லா குழந்தைகளுக்கும் தாயே நல்ல கல்வி அளிக்க இயலும் என்பதே உண்மை. இதற்கென்று தனியாக படிப்போ தகுதியோ தேவையில்லை என்பதும் நிதர்சன உண்மை. எல்லாம் நாம் பயன்படுத்தும் வழிமுறையில்தான் இருக்கின்றது. சரி, விஷயத்துக்கு வருவோம்.

நான் படித்ததெல்லாம் இந்தியாவில் மாநகராட்சி பள்ளியில்தான் என்றாலும், கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் சராசரி அளவில் வெறும் மனப்பாடம் செய்வதையும், தகவல் களஞ்சியமாக மாற்றுவதற்கே தவிர பிள்ளைகளுக்கு வேறு எதனையும் சொல்லித் தருவது இல்லை என்பதே என் வாக்கு. இல்லை என்று வாதிடுபவர்கள் சமீபத்தில் வெளி வந்த ஆமீரின் 'தாரே ஜமீன் பர்' படத்தை ஒரு தடவை பாருங்கள். அதன் பின் அதைப் பற்றி விவாதிக்கலாம். இந்த பிரச்சினை இந்தியா போன்ற வளரும் அல்லது வளர்ச்சி அடையாத நாடுகளுக்கே அன்றி இப்பொழுது அதிகமாக வேலை விஷயமாக அயல் நாடுகளில் வாழ்பவர்கள் இதைப் பற்றி யோசிக்க வேண்டியது இல்லை என்றால் மீண்டும் கூறுகின்றேன், கூகுள் மாமாவையே கேட்டுப் பாருங்கள் ஒவ்வொரு நாட்டின் கல்வி திட்டமும் எப்படி உள்ளது என.

உதாரணமாக, நாம் குழந்தைக்கு நம்மை மற்றும் சகல் ஜீவராசிகளைப் படைத்தது இறைவன் என கூறி வைப்போம் ஆனால், பள்ளிகளில் டார்வின் தியரி கட்டாய பாடம், அதைப் படித்து மனப்பாடம் செய்து தேர்வில் சரியாக எழுதினால் மட்டுமே குழந்தை அடுத்த வகுப்பிற்கு போக முடியும். இந்த சூழ்நிலையில் குழந்தைக்கு எவ்வாறு படைப்பின் அருமையை விளக்குவீர்கள்?

இன்னொரு உதாரணம் சொல்லுகின்றேன். இந்தியா உள்பட எல்லா நாடுகளிலும் தற்போது 'DRUG FREE ZONE' என்று போர்டு மாட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. தங்கள் பிள்ளை படிக்கும் பள்ளி உண்மையில் 'DRUGS FREE'யா? அல்லது மேற்பூச்சா என்பதை எப்படி பரிசோதிப்பீர்கள். அங்கு படிக்கும் பிள்ளைகள் உங்கள் பிள்ளையை தப்பான வழிக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதை எப்படி உறுதி படுத்துவீர்கள்?

இன்னும் சில சகோதர சகோதரிகளின் வாதம் என்னவெனில் மற்ற பிள்ளைகளுடன் பின்பு எப்படி பழகுவார்கள்? குழந்தைகளுக்கு தீயது எது என்று காட்டாவிட்டால், நல்லதின் தாக்கம் அவர்களுக்கு எப்படி புரியும் என்பது. அவர்களுக்கு என்ன சொல்வது? குழந்தைகள் மாசு மருவற்ற உள்ளத்தோடு பிறக்கின்றார்கள். தொடக்ககாலத்திலேயே அவர்களுக்கு நல்லதை காண்பித்து, பழக்கி விட்டால் பின்பு தீயதை காண நேரும்போதும் சரி அதை கடந்தே ஆக வேண்டிய சூழ் நிலையிலும் சரி அவர்களின் உறுதி அழியாது. ஆனால் தொடக்கத்திலேயே அவர்களுக்கு தீயதை பழக வேண்டிய சூழ்நிலையை நாமே உருவாக்கிக் கொடுத்தால்?

இளம்பிஞ்சுகளை தங்களின் உடல் பசிக்காக உபயோகிப்பதும் பல பள்ளிகளில் நடக்கின்றது. நாம், நம் பிள்ளைகளைவிடவும் அயலார்மீது அதிக நம்பிக்கை வைத்து நம் பிள்ளைகளை அவர்களின் சொல்படி நடக்குமாறு பணிக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் பிள்ளைகள் யார் மீது நம்பிக்கை வைப்பர்? பின் வளர்ந்தபின் அதன் தாக்கம் யார் மீது வீழும்?

இன்னும் பல விவாதங்களை காணலாம் எனினும் மேலும் உங்களின் பல கேள்விகளுக்கு கூகுளில் தேடுவதாலேயே நிறைய விடைகள் கிடைக்கும். அடுத்த பதிவில் இது போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் இன்னும் '' பற்றி புரிந்து கொள்ள தேவையான தகவல் வலைகளையும் கொடுக்கின்றேன், இன்ஷா அல்லாஹ்.

மீண்டும் சந்திப்போம்.
அதுவரை தேவை து'ஆ.
வஸ்ஸலாம்.