November 15, 2010

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களும், சிந்தனைக்கு ஒன்றும்...!

அஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் இனிய சகோதர சகோதரிகளே..,எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் ஹாஜிகள் எல்லோரும் தத்தம் கடமை முடித்து ஊர் திரும்பும் நேரம் இது. நானும் என் பெற்றோரின் நலமுடன் கூடிய  வருகைக்கு காத்திருக்கிறேன். கடந்த சில தினங்களாக பதிவெதுவும் எழுத முடியாத சூழ்நிலை. இன்ஷா அல்லாஹ், ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறேன். அதுவரை வல்ல றஹ்மானிடம் நம் அனைவருக்காகவும் து’ஆ செய்யுங்கள். து’ஆ எந்த அளவு வலுவானதாக, உள்ளத்தில் எத்தகைய அச்சத்துடன் வர வேண்டும் என்பதற்காக ஒரு சின்ன வரைபடம் கீழே. அதை விவரிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். மற்றவை, இடைவேளைக்கு பிறகு. வ ஸலாம்.
.

November 01, 2010

உதவிக் கரங்களை எதிர்பார்த்து...

புற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன் வாருங்கள்! print Email
உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள்
திங்கள், 01 நவம்பர் 2010 21:36
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான்.

பள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கேன்சரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க இயலாதாம். தொடர்ந்து 2 வருட காலம் தீவிர சிகிச்சை செய்ய வேண்டுமாம். (சுட்டி: மருத்துவர்களின் பரிந்துரை) மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு, தம்மால் இயன்ற அளவில் சேமித்து ஆங்கிலக் கல்வியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாணவனின் தந்தை சுலைமான் மீளாத் துயரத்திலும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவிக் கரங்களையும் எதிர்பார்த்தும் உள்ளார்.
வங்கிக் கணக்கு விபரங்கள்:
M. Sulaiman
SBT, Colachel Branch
A/C No : 57059234495
கேன்சர் போன்ற பணக்கார நோய்க்கு 2 வருட காலம் தீவிர சிகிச்சை என்பதும் அது சுலைமான் போன்ற ஏழைகளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு சிரமம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.  சிறுவன் அபூபக்கர், உங்களது உதவியை எதிர் நோக்கி இருக்கிறார்.

இங்கே உள்ள வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பி வைத்தால், வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். இதற்கான நற்கூலிகள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!
உதவியினை உடனடியாக அனுப்ப இயலாதவர்கள் இவ்விஷயத்தை பிறருக்கு உடனடியாக தெரிவியுங்கள். [http://www.satyamargam.com/1569] அத்துடன் இந்த குடும்பத்தினரின் இன்னல்களைப் போக்கிட, குறிப்பாக இந்த சிறுவனுக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கவும்.

:-சத்தியமார்க்கம்.காம்