January 26, 2011
ஜுஜ்ஜுவின் வளர்ச்சி
அல்ஹம்துலில்லாஹ். மீண்டும் வலையில் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சியே. இன்னொரு செல்வத்தின் வருகயை ஒட்டி என்னால் சில காலம் எழுத முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். புதிய நபர், இப்றாஹீம் முஹம்மது அப்துர் ரஹீமிற்கு து’ஆ செய்யவும்.
ஜுஜ்ஜு தினம் தினம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்கிறான். ஆனால் அவனின் அறிவுப்பசிக்கு அந்த வேகத்தில் தீனியிட முடிவதில்லை சில நேரம், கைப்பிள்ளையையும் கவனிக்க வேண்டி இருப்பதால். து’ஆ செய்யவும்.
gudli.com மற்றும் starfall.com மட்டுமே அவனுக்கு நாள்தோறும் நிறைய பழக, படிக்க கற்றுத்தருகிறது. அவனின் கற்கும் வேகமும் அதிகம். மகிழ்ச்சியாய் உள்ளது அவனின் அறிவை கண்டு, அதே நேரம் சிறு பிள்ள என்னும் பருவம் வேகமாய் மறைகிறதே என்றும் கவலை. அல்லாஹு த ஆலா போதுமானவன்.
போன வாரம் முதல் அவனின் வளர்ச்சியை குறித்து வைக்க ஆரம்பித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ், அரபி ஆகிய மூன்றிலும் அத்தனை எழுத்துக்களும் நன்றாய் தெரிகிறது. ஆங்கில எண்களும் கிட்டத்தட்ட 50 வரை சொல்லுகிறான். விளையாட்டாகவே இத்தனையும் கற்றுக்கொண்டது சந்தோஷமே. போன வாரம் அவனின் வளர்ச்சியை ரெக்கார்டு செய்து வைக்கும் விதமாக சில வேலைகளை சேர்ந்து செய்தோம். அதன் புக்கைப்படங்கள் கீழே. து’ஆ செய்யுங்கள். புகைப்படங்களைக் கண்டு ஏதேனும் ஐடியா தேவைப்பட்டாலோ, கேள்வி இருந்தாலோ, உங்கள் குழந்தையிடமும் இப்படி செய்து பார்க்கவேண்டி இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
A, B, C, D எல்லா எழுத்துக்களையும் UPPER CASE மேலேயும், LOWER CASE கீழேயும் எழுதினால் அந்தந்த எழுத்துக்களுடன் சரியாக இணைக்க வேண்டும்.
அதையும் எல்லா 26 எழுத்துக்களுக்கும் சரியாக செய்தான்.
பின்னர் எனக்கு தெரிந்த கலையை கொண்டு நான் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருளை வரைந்து அவை என்ன என்ன என்று கூறிய பின் அதையும் சரியாக இணைத்தான்.
பின்னர் Play Dough கொண்டு சில பொருட்களை செய்தோம். அதுவும் அவனுக்கு பிடித்து போனது.
இனி அடுத்த வாரம் மற்ற மொழிகளையும் சோதித்து பார்க்க வேண்டும். அதுவரை, தேவை து’ஆ.
வ ஸலாம்.
ஜுஜ்ஜு தினம் தினம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்கிறான். ஆனால் அவனின் அறிவுப்பசிக்கு அந்த வேகத்தில் தீனியிட முடிவதில்லை சில நேரம், கைப்பிள்ளையையும் கவனிக்க வேண்டி இருப்பதால். து’ஆ செய்யவும்.
gudli.com மற்றும் starfall.com மட்டுமே அவனுக்கு நாள்தோறும் நிறைய பழக, படிக்க கற்றுத்தருகிறது. அவனின் கற்கும் வேகமும் அதிகம். மகிழ்ச்சியாய் உள்ளது அவனின் அறிவை கண்டு, அதே நேரம் சிறு பிள்ள என்னும் பருவம் வேகமாய் மறைகிறதே என்றும் கவலை. அல்லாஹு த ஆலா போதுமானவன்.
போன வாரம் முதல் அவனின் வளர்ச்சியை குறித்து வைக்க ஆரம்பித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ், அரபி ஆகிய மூன்றிலும் அத்தனை எழுத்துக்களும் நன்றாய் தெரிகிறது. ஆங்கில எண்களும் கிட்டத்தட்ட 50 வரை சொல்லுகிறான். விளையாட்டாகவே இத்தனையும் கற்றுக்கொண்டது சந்தோஷமே. போன வாரம் அவனின் வளர்ச்சியை ரெக்கார்டு செய்து வைக்கும் விதமாக சில வேலைகளை சேர்ந்து செய்தோம். அதன் புக்கைப்படங்கள் கீழே. து’ஆ செய்யுங்கள். புகைப்படங்களைக் கண்டு ஏதேனும் ஐடியா தேவைப்பட்டாலோ, கேள்வி இருந்தாலோ, உங்கள் குழந்தையிடமும் இப்படி செய்து பார்க்கவேண்டி இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
| A - Z வரை அவனின் கார்கள் கொண்டு ஜோடித்து பார்த்தோம். |
ஒரு வீட்டை வரைந்து அதனை சுற்ரி பல்வேறு கலரில் நான் பொருட்களை வரைந்தால் அந்தந்த கலர் ஸ்கெட்சை கொண்டு கோடிட வேண்டும்.
ஒன்றிரண்டை தவிர மற்றதெல்லாம் அவனே சத்தமாக அந்த நிறத்தின் பெயரை கூறி கோடுகள் இட்டான்.
அதையும் எல்லா 26 எழுத்துக்களுக்கும் சரியாக செய்தான்.
பின்னர் எனக்கு தெரிந்த கலையை கொண்டு நான் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருளை வரைந்து அவை என்ன என்ன என்று கூறிய பின் அதையும் சரியாக இணைத்தான்.
பின்னர் Play Dough கொண்டு சில பொருட்களை செய்தோம். அதுவும் அவனுக்கு பிடித்து போனது.
இனி அடுத்த வாரம் மற்ற மொழிகளையும் சோதித்து பார்க்க வேண்டும். அதுவரை, தேவை து’ஆ.
வ ஸலாம்.
November 15, 2010
ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களும், சிந்தனைக்கு ஒன்றும்...!
அஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் இனிய சகோதர சகோதரிகளே..,
எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் ஹாஜிகள் எல்லோரும் தத்தம் கடமை முடித்து ஊர் திரும்பும் நேரம் இது. நானும் என் பெற்றோரின் நலமுடன் கூடிய வருகைக்கு காத்திருக்கிறேன். கடந்த சில தினங்களாக பதிவெதுவும் எழுத முடியாத சூழ்நிலை. இன்ஷா அல்லாஹ், ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறேன். அதுவரை வல்ல றஹ்மானிடம் நம் அனைவருக்காகவும் து’ஆ செய்யுங்கள். து’ஆ எந்த அளவு வலுவானதாக, உள்ளத்தில் எத்தகைய அச்சத்துடன் வர வேண்டும் என்பதற்காக ஒரு சின்ன வரைபடம் கீழே. அதை விவரிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். மற்றவை, இடைவேளைக்கு பிறகு. வ ஸலாம்.

.
வகையறா
இடைவேளை,
ஈகை பெருநாள்,
ஈத்,
ஈத் முபாரக்,
ஹஜ்
November 01, 2010
உதவிக் கரங்களை எதிர்பார்த்து...
| புற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன் வாருங்கள்! |
| உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள் | ||
| திங்கள், 01 நவம்பர் 2010 21:36 | ||
பள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கேன்சரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க இயலாதாம். தொடர்ந்து 2 வருட காலம் தீவிர சிகிச்சை செய்ய வேண்டுமாம். (சுட்டி: மருத்துவர்களின் பரிந்துரை) மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு, தம்மால் இயன்ற அளவில் சேமித்து ஆங்கிலக் கல்வியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாணவனின் தந்தை சுலைமான் மீளாத் துயரத்திலும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவிக் கரங்களையும் எதிர்பார்த்தும் உள்ளார்.
கேன்சர் போன்ற பணக்கார நோய்க்கு 2 வருட காலம் தீவிர சிகிச்சை என்பதும் அது சுலைமான் போன்ற ஏழைகளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு சிரமம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம். சிறுவன் அபூபக்கர், உங்களது உதவியை எதிர் நோக்கி இருக்கிறார். இங்கே உள்ள வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பி வைத்தால், வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். இதற்கான நற்கூலிகள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்! உதவியினை உடனடியாக அனுப்ப இயலாதவர்கள் இவ்விஷயத்தை பிறருக்கு உடனடியாக தெரிவியுங்கள். [http://www.satyamargam.com/1569] அத்துடன் இந்த குடும்பத்தினரின் இன்னல்களைப் போக்கிட, குறிப்பாக இந்த சிறுவனுக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கவும். :-சத்தியமார்க்கம்.காம் . |
Subscribe to:
Posts (Atom)