Showing posts with label தாய் தரும் கல்வி. Show all posts

January 26, 2011
ஜுஜ்ஜுவின் வளர்ச்சி
அல்ஹம்துலில்லாஹ். மீண்டும் வலையில் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சியே. இன்னொரு செல்வத்தின் வருகயை ஒட்டி என்னால் சில காலம் எழுத முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். புதிய நபர், இப்றாஹீம் முஹம்மது அப்துர் ரஹீமிற்கு து’ஆ செய்யவும்.
ஜுஜ்ஜு தினம் தினம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்கிறான். ஆனால் அவனின் அறிவுப்பசிக்கு அந்த வேகத்தில் தீனியிட முடிவதில்லை சில நேரம், கைப்பிள்ளையையும் கவனிக்க வேண்டி இருப்பதால். து’ஆ செய்யவும்.
gudli.com மற்றும் starfall.com மட்டுமே அவனுக்கு நாள்தோறும் நிறைய பழக, படிக்க கற்றுத்தருகிறது. அவனின் கற்கும் வேகமும் அதிகம். மகிழ்ச்சியாய் உள்ளது அவனின் அறிவை கண்டு, அதே நேரம் சிறு பிள்ள என்னும் பருவம் வேகமாய் மறைகிறதே என்றும் கவலை. அல்லாஹு த ஆலா போதுமானவன்.
போன வாரம் முதல் அவனின் வளர்ச்சியை குறித்து வைக்க ஆரம்பித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ், அரபி ஆகிய மூன்றிலும் அத்தனை எழுத்துக்களும் நன்றாய் தெரிகிறது. ஆங்கில எண்களும் கிட்டத்தட்ட 50 வரை சொல்லுகிறான். விளையாட்டாகவே இத்தனையும் கற்றுக்கொண்டது சந்தோஷமே. போன வாரம் அவனின் வளர்ச்சியை ரெக்கார்டு செய்து வைக்கும் விதமாக சில வேலைகளை சேர்ந்து செய்தோம். அதன் புக்கைப்படங்கள் கீழே. து’ஆ செய்யுங்கள். புகைப்படங்களைக் கண்டு ஏதேனும் ஐடியா தேவைப்பட்டாலோ, கேள்வி இருந்தாலோ, உங்கள் குழந்தையிடமும் இப்படி செய்து பார்க்கவேண்டி இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
A, B, C, D எல்லா எழுத்துக்களையும் UPPER CASE மேலேயும், LOWER CASE கீழேயும் எழுதினால் அந்தந்த எழுத்துக்களுடன் சரியாக இணைக்க வேண்டும்.
அதையும் எல்லா 26 எழுத்துக்களுக்கும் சரியாக செய்தான்.
பின்னர் எனக்கு தெரிந்த கலையை கொண்டு நான் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருளை வரைந்து அவை என்ன என்ன என்று கூறிய பின் அதையும் சரியாக இணைத்தான்.
பின்னர் Play Dough கொண்டு சில பொருட்களை செய்தோம். அதுவும் அவனுக்கு பிடித்து போனது.
இனி அடுத்த வாரம் மற்ற மொழிகளையும் சோதித்து பார்க்க வேண்டும். அதுவரை, தேவை து’ஆ.
வ ஸலாம்.
ஜுஜ்ஜு தினம் தினம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்கிறான். ஆனால் அவனின் அறிவுப்பசிக்கு அந்த வேகத்தில் தீனியிட முடிவதில்லை சில நேரம், கைப்பிள்ளையையும் கவனிக்க வேண்டி இருப்பதால். து’ஆ செய்யவும்.
gudli.com மற்றும் starfall.com மட்டுமே அவனுக்கு நாள்தோறும் நிறைய பழக, படிக்க கற்றுத்தருகிறது. அவனின் கற்கும் வேகமும் அதிகம். மகிழ்ச்சியாய் உள்ளது அவனின் அறிவை கண்டு, அதே நேரம் சிறு பிள்ள என்னும் பருவம் வேகமாய் மறைகிறதே என்றும் கவலை. அல்லாஹு த ஆலா போதுமானவன்.
போன வாரம் முதல் அவனின் வளர்ச்சியை குறித்து வைக்க ஆரம்பித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ், அரபி ஆகிய மூன்றிலும் அத்தனை எழுத்துக்களும் நன்றாய் தெரிகிறது. ஆங்கில எண்களும் கிட்டத்தட்ட 50 வரை சொல்லுகிறான். விளையாட்டாகவே இத்தனையும் கற்றுக்கொண்டது சந்தோஷமே. போன வாரம் அவனின் வளர்ச்சியை ரெக்கார்டு செய்து வைக்கும் விதமாக சில வேலைகளை சேர்ந்து செய்தோம். அதன் புக்கைப்படங்கள் கீழே. து’ஆ செய்யுங்கள். புகைப்படங்களைக் கண்டு ஏதேனும் ஐடியா தேவைப்பட்டாலோ, கேள்வி இருந்தாலோ, உங்கள் குழந்தையிடமும் இப்படி செய்து பார்க்கவேண்டி இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
| A - Z வரை அவனின் கார்கள் கொண்டு ஜோடித்து பார்த்தோம். |
ஒரு வீட்டை வரைந்து அதனை சுற்ரி பல்வேறு கலரில் நான் பொருட்களை வரைந்தால் அந்தந்த கலர் ஸ்கெட்சை கொண்டு கோடிட வேண்டும்.
ஒன்றிரண்டை தவிர மற்றதெல்லாம் அவனே சத்தமாக அந்த நிறத்தின் பெயரை கூறி கோடுகள் இட்டான்.
அதையும் எல்லா 26 எழுத்துக்களுக்கும் சரியாக செய்தான்.
பின்னர் எனக்கு தெரிந்த கலையை கொண்டு நான் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருளை வரைந்து அவை என்ன என்ன என்று கூறிய பின் அதையும் சரியாக இணைத்தான்.
பின்னர் Play Dough கொண்டு சில பொருட்களை செய்தோம். அதுவும் அவனுக்கு பிடித்து போனது.
இனி அடுத்த வாரம் மற்ற மொழிகளையும் சோதித்து பார்க்க வேண்டும். அதுவரை, தேவை து’ஆ.
வ ஸலாம்.
October 21, 2010
தாய் எனும் வைரம் --3
அந்த சிறுவனின் வயது இரண்டோ மூன்றோதான். ஆனால் அவனின வருகை, சபையில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைக்கும். ஏன்? ஏனெனில் அவனுடைய 'அதப்'(Adaab - குணநலன்கள்) அத்தனை அழகானது. எப்பொழுதும் மரியாதையுடன் எல்லோரையும் அழைப்பதும், அழைப்பிற்கு தாழ்ந்து பதில் சொல்வதும், நம்முடைய அகராதியில் சொல்ல வேண்டுமென்றால் ப்ளீஸ், தேன்க்யூ, மே ஐ?...போன்ற மதிப்பை ஏற்படுத்தும் சொற்களை உபயோகிப்பதும், அடக்கத்தை தன் செயல்களில் காட்டுவதாலும் அச்சிறுவனை ஊரே மெச்சியது. இந்த பாராட்டுக்கெல்லாம் உரிய அந்த சிறுவன் யார், இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹி).
அத்தனை சிறு வயதிலேயே அவர் ஊரே மதிக்கும், மரியாதை தரும், புகழும் சிறுவனாய் திகழ்ந்தது எப்படி? அவரின் நன்னடத்தையால். இமாம் அஹ்மதின் (ரஹி) தாய்க்கு தெரிந்திருந்தது, எல்லா 'இல்மு'க்கும்(அறிவு / ஞானம்) முன்னர் ஒரு குழந்தை கற்க வேண்டியது அதபே!! அதாவது நன்னடத்தையே. எனவே அத்தாயானவர்கள் இமாம் அவர்களுக்கு அதிகமாக குர்'ஆன் ஞானத்தையோ, அல்லது ஹதீத் ஞானத்தையோ அளிக்கவில்லை, மாறாக சாப்பிடும்போது, சபைக்குள் வரும்போது, பெரியவர்களை சந்திக்கும்போது என எல்லா இடங்களிலும் நன்முறையில் நடந்து கொள்வது எப்படி என்பதை நன்முறையிலும் அதிகமாகவும் கற்றுக் கொடுத்தார்.
ஒரு முறை இமாமவர்கள், அவர்களின் மிகச் சிறு வயதில் ஒரு சபையில் இருக்கும்போது ஒரு அரபி, அவரின் நண்பரிடம் கூறினார், நானும் என் குழந்தைகளுக்காக பெரும் பெரும் செலவெல்லாம் செய்து நல்ல நல்ல 'மு'அத்தபீன்'களைக் கொண்டு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்...என்றாலும் இந்த சிறுவனை (இமாம் அஹ்மது) போல அவர்களின் குணநலன்கள் இல்லை என்று.
அந்த காலங்களில் அரேபிய வழக்கப்படி 'மு'அத்தபீன்' எனப்படுபவர்களிடம் குழந்தைகளை அனுப்பி பாடம் படிக்க வைப்பதும், அல்லது 'மு'அத்தபீன்'களை வீட்டீலேயே வரவைத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதும் பொதுவான ஒரு செயல். யார் இந்த 'மு'அத்தபீன்கள்? 'அதப்' என்னும் வார்த்தையில் இருந்து தோன்றிய பெயரே அது. "அதபை சொல்லித் தருபவர்கள்" அதாவது குழந்தைகளுக்கு நன்னடத்தையையும், நல்ல குணநலன்களையும் சொல்லித்தருபவர்கள்.
இப்பொழுது புரிந்ததா அந்த அரபியின் வருத்தம். இன்னொன்றையும் உற்று நோக்கினால் புரியும். இமாமவர்கள் ஞானமெல்லாம் கற்று பெரிய இமாம் ஆகும் முன்னர் அவரும் ஒரு 'மு'அத்தபீன்' ஆகவே இருந்தார் என்றால் அது மிகையாகாது. யார்தான் விரும்ப மாட்டார், தன் பிள்ளையின் நற்குணங்களை ஊரே மெச்ச வேண்டும் என?
பற்பல இமாம்களின் சரித்திரத்தை படிக்கும்போது அவர்களின் வாழ்வையும், குணங்களையும், கொள்கைகளையும் கண்டு வியந்து போகிறோம். ஆனால் அதை கற்றுத்தந்த தாய்மார்களைப் பற்றி குறைந்த தகவலே நமக்கு கிட்டுகிறது. இப்படி, அவர்களின் பெயர் சரித்திரத்தில் தத்தம் பிள்ளைகளாலேயே இடம் பெறுகிறது. இங்கும் இமாம் அவர்களின் குணநலஙளில் சீரிய கவனம் செலுத்தியதாலேயே, அவர் ஞானமும் அதிகம் பெற்றார், ஞானமும், நன்னடத்தையும் ஒருங்கே அமைந்ததனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அசைக்க இயலா இடத்தை பெற்றார். எனவே தாய்மார்கள் சிந்திக்க வேண்டியது என்ன, உங்களால் மட்டுமே உங்களின் பிள்ளைகளின் வாழ்வை செப்பனிட முடியும். நேரம் வீணாவதன் முன், இன்றே, இப்பொழுதே, அதற்கான வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.
மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்.
.
September 28, 2010
தாய் எனும் வைரம் --2
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.
சென்ற பதிவில் இமாம் மாலிக்(ரஹி) அவர்களின் தாயைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாயைப் பற்றியும், அவரின் விடா முயற்சியும், அல்லாஹ் மீதிருந்த அசையா நம்பிக்கையும். மாஷா அல்லாஹ், இமாம்களைப் பற்றி படிப்பதற்கு முன் அவர்களின் தாயைப் பற்றி தெரிந்து கொள்வது இன்னும் அதிகமான பிரமிப்பை உருவாக்குகின்றது. அவர்களின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது இன்றைய சூழலில் பிள்ளை பெறுவதையும் வளர்ப்பதையும் பாரமாக நினைக்கும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு இப்றாஹீம் அல் புகாரி(ரஹி) அவர்கள் இஸ்மாயீல் என்பவருக்கு மகனாக கி.பி 810இல் (மேற்கு துர்கிஸ்தானில் உள்ள) புகாரா என்னும் ஊரில் ஜும்'ஆ தொழுகைக்கு பின் பிறந்தார்கள் என்றறியப்படுகின்றது. இவர் பிறக்கும்போதே கண் பார்வையில்லாதவராக பிறந்தவர். என்ன? ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். உண்மை அதுவே. தந்தையை சிறு பிராயத்திலேயே பறி கொடுத்த இமாமவர்கள் பிறவிக் குருடனாகவும் இருந்தார்கள்.
அந்த காலத்தில் எல்லாம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் விதவையானாலோ அல்லது தலாக்காகி விட்டாலோ சிறிது நாட்களிலேயே மறுமண வரன்கள் அவர்களை நோக்கி குவியும். இங்கே நான் குறிப்பிடுவது மேல்வர்க்க பெண்களையோ அல்லது செல்வச்சீமாட்டிகளையோ அல்ல. மாறாக அல்லாஹ்வின் பாதையில் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் அர்ப்பணிக்க தயாராக இருந்தவர்கள்.
அந்த கால கட்டத்தில் தன் கணவனை இழந்திருந்த இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாய்க்கும் அந்த வாய்ப்புகள் வராமல் இல்லை. மாறாக அவர் வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார். தன் மனதின் ஆசைகளையும் உடல் தேவைகளையும் கட்டுப்படுத்தி தன் குழந்தைகளை சீரும் சிறப்புமாய் இஸ்லாத்தின் மடியில் வளர்ப்பதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தகைய தாய்க்கு தன் மகன் குருடாய் இருப்பது எவ்வளவு மன வேதனையளித்திருக்கும்? து'ஆ செய்ய ஆரம்பித்தார். ஒன்றல்ல, இரண்டல்ல...யாரிடமும் கேட்டல்ல...கண்கள் இரண்டிலிருந்தும் ஆறுகள் பாய்கின்றனவோ என எண்ணுமளவிற்கு இறைவனிடம் இறைஞ்சுவதில் சிறிதும் குறைவின்றி எல்லா நேரமும் அதே நோக்கத்தில் து'ஆவும் தொழுகையுமாக இருந்தார். அல்லாஹ்வின் கருணைக்கரம் அவரை நோக்கியும் நீண்டது. அவரின் கனவில் ஓர் நாள் நபி இப்றாஹீம்(அலைஹ்) அவர்கள் வந்தனர். வந்தவர்கள் அந்த தாய்க்கு ஆறுதல் கூறி, அவர்களின் து'ஆ இறைவனிடத்தில் ஏற்கப்பட்டதை கூறி அதன் பலனாய் இமாமவர்கள் பார்வை கிடைக்கப் பெற்றதையும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ் தூக்கத்திலிருந்து விழித்த தாய் அந்த கனவில் வந்த செய்தியை உண்மையென கண்டார்கள். இமாமவர்களின் கண்களில் பார்வை அருளப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அதன்பின் அந்த தாய் தன் மகனை எவ்வாறு வளர்த்தார் என்பது இமாமவர்க்ளின் வாழ்வின் மூலமும், அவரின் ஒப்பற்ற புத்தகங்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அந்த தாயின் து'ஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணிகள்:
- அல்லாஹ் மீதான அசையாத நம்பிக்கை, அவனின் உதவி மேலான நம்பிக்கை.
- து'ஆ ஏற்றுக்கொள்ளபட வேண்டிய சூழலை உண்டாக்கியது (ஆம்! து'ஆ ஒவ்வொன்றும் கபூல் ஆவதற்கு தேவையான காரணிகள் பல உண்டு )
- தம் பிள்ளைகள் இஸ்லாத்திற்காகவே வாழ்ந்து அதன் பாதையிலேயே மரணிக்க வேண்டும் என மனதில் உறுதியுடன் வாழ்ந்தது.
- இன்னும் பல கூறலாம்.
நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கேள்வி:
- நாம் எவ்வளவு தூரம் நம் குழந்தைகளுக்காக து'ஆ செய்கின்றோம்?
- அவர்களின் உடல் நலனுக்காகவும், பாட சம்பந்தமாகவும் கட்டாயம் செய்வோம். அவர்களின் ஆகிரத்திற்காக?
- அல்லாஹ்விடம் அவர்களுக்காக தவ்பா செய்து?
- அவர்களின் அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள?
- நாளை கப்ரில் நாம் சென்ற பிறகு நமக்காக து'ஆ செய்யும் ஹிக்மத்திற்காக?
யோசியுங்கள். முடிவு உங்கள் கையில். எப்பொழுதும் நம்மை மாற்றிக் கொள்ளலாம்...திண்ணமாக அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் உள்ளது!!
இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மின்னும் வைரங்களோடு சந்திப்போம். அதுவரை தேவை து'ஆ.
June 04, 2010
தாய் எனும் வைரம் --1
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்
வைரம் மட்டுமே மற்றொரு வைரத்தை அறுக்கவோ, அதை செதுக்கவோ அதன் மூலம் மின்ன வைக்கவோ முடியும். இந்த தொடரில் நாம் நம் சமுதாயத்தில் மின்னிய இன்னும் மின்னிக் கொண்டிருக்கின்ற வைரங்களையும் அவர்களை வைரங்களாக்குவதில் தன் வாழ்வையே அர்ப்பணித்த தாய் எனும் வைரங்களையும் பார்க்க போகின்றோம், இன்ஷா அல்லாஹ்.
மீண்டும் கூறுகின்றேன், இது தாய்க்கு மட்டுமல்ல. தந்தைமார்களும் தங்களால் முடிந்த அளவு குழந்தைகளை நல்வழியில் வளர்க்க பொறுப்பேற்க வேண்டும். சரி, இனி முதல் வைரத்தை பார்க்கலாம். எந்த வித அளவுகோல்களைக் கொண்டும் நான் இவர்களை ஒன்று, இரண்டு என்று வரிசைப் படுத்தவில்லை. ஞாபக்த்தில் வருவதைக் கொண்டும், வலையில் ஆதாரம் கிட்டுவதைக் கொண்டுமே நான் வரிசைப் படுத்தியுள்ளேன். ஏதேனும் தவறிருந்தால், தயவு செய்து சுட்டிக் காட்டவும். நன்றி.
மதீனாவின் பழைய காலம் அது. எங்கெங்கு நோக்கினும் ஹதீத்களையும் குர்'ஆனையும் படிக்கவும், மனப்பாடம் செய்யவும், அதை ஆராய்ந்து அறியவும், அதன் மூலம் பல துறைகளில் அறிவை வளர்த்தவும் என ஆலிம்களாலும், தாபயீன்களாலும், சில சஹாபாக்களாலும் மதீனாவின் தெருக்கள் நிறைந்திருந்த காலம் அது. அத் தெருக்களின் வழியே அச்சிறுவன் சென்று கொண்டிருந்தான். புறாக்களை துரத்துவதிலும், பாடித் திரியும் நாடோடிகளை பின் தொடரவுமே அவனின் நேரம் சரியாக இருந்தது. அதனால் அவன் படிக்கவில்லை என்றில்லை, என்றாலும் கல்விக்கும், ஞானத்திற்கும் புகழ் பெற்ற அந்த குடும்பத்தில் இச் சிறுவனைப் பற்றிய கவலை தொடர்கதையானது.
தந்தைக்கு மிகவும் வருத்தமாக இருப்பினும், நல்வழியிலேயே அச்சிறுவனை நேர்வழியில் கொண்டு வர நினைத்தார். எனவே ஓர் நாள், ஓர் போட்டி வைத்தார், அச் சிறுவனும் அவனின் அண்ணனும் அதில் பங்கு பெற்றனர். அச் சிறுவனின் தந்தை ஓர் கேள்வியை கேட்டார். அச் சிறுவன் தவறான பதிலை கூறினான், அவனின் அண்ணன் சரியான விடையை கூறினார். தந்தை அச் சிறுவனைப் பார்த்து கூறினார்,
"பறவைகளிடத்தில் நீ செலுத்தும் நேரம் உன்னை கல்வியிலிருந்து தூரமாக்கி விட்டது என்றே எண்ணுகின்றேன்".
சிறுவன் வெட்கி தலை குனிந்தான், பின் கூறினான்.
"நான் இந்த படிப்பிலெல்லாம் கவனம் செலுத்தப் போவதில்லை. நானும் பிரபல பாடகனாக போகின்றேன்".
அச்சிறுவனின் தாய் கூறினார்,
"நல்ல குரல்வளம் இல்லையென்றால் நல்ல களையான முகமிருந்தும் பலனில்லை"
சிறுவன் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தான். என்ன செய்ய? அத் தாய் கூறினார்,
"இசை உன்னை உயர கொண்டு செல்லாவிட்டாலும் ஞானம் உன்னை வெகு உயரத்தில் கொண்டு சேர்க்கும்"
மறுநாள் அத்தாய், அக்காலத்தில் ஆலிம்களும் அவர்தம் மாணவர்களும் உடுத்தும் உடைகளைப் போன்ற உடைகளை கொண்டு வந்தார். அதை கண்டவுடன் அச் சிறுவன், மிகவும் மகிழ்ச்சியடைந்து எப்படி படிக்க போவது, எப்படி ஞானத்தை தேடுவது என்று கேட்டான். அத்தாய் அந்த உடைகளை அச்சிறுவனுக்கு உடுத்தி பின்னர் கூறினார்.
"ராபியா என்னும் ஆசிரியரிடம் போய் சேர்வாயாக. ஆனால், அவரிடமிருந்து கல்வி கற்கும் முன்னர் அவரின் அதபை (ஒழுக்கங்களை) கற்பாயாக!
என்று கூறினார். அத்தாய் சரியான நேரத்தில் பக்குவப் படுத்தி கல்வி கற்க அனுப்பிய அச் சிறுவனே இன்று ஹதீதுகளின் விஷயத்தில் நட்சத்திரமாய் மின்னுபவர் என அவரின் மாணவர்களால் புகழப்பட்ட, இன்றும் புகழப்படுகின்ற இமாம் மாலிக்.
பாடம்:
1. குழந்தைகளை நேர்வழிப்படுத்த வன்முறையை உபயோகப் படுத்தாதீர். அன்பாய், பக்குவமாய் அவர்களை அணுகுங்கள்.
2. குழந்தையின் ஆசிரியர் விஷயத்தில் கவனமாய் இருங்கள். ஞானம் மட்டும் ஒரு மனிதனை முழுமைப் படுத்தாது, அவனின் ஒழுக்கங்களே அவனைப் பற்றி காலாகாலத்திற்கும் பேசும். எனவே ஒழுக்கத்தில் சிறந்த மனிதரையே ஆசிரியராக தேர்ந்தெடுங்கள். அவர் மற்றவர்களைவிடவும் ஞானத்தில் குறைந்தவராக இருப்பினும் சரி.
3. சரியான நேரத்தில் பக்குவப் படுத்துவதே அவர்களின் வாழ்வில் இறுதி வரை கை கொடுக்கும். குழந்தைதானே, வளர்ந்தபின் சரி செய்து கொள்ளலாம் என அப்பொழுதும் எண்ணாதீர்கள். பின் சமயமே கிட்டாது.
இன்னும் பல வைரங்களை பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.
அதுவரை தேவை து'ஆ.
வஸ்ஸலாம்.

May 16, 2010
வீட்டிலேயே குழந்தைகளுக்கு கல்வி தர இயலுமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்.
இந்த பதிவு எழுதுவதின் நோக்கம், இந்த வலைப்பூவை எந்த அளவு நீங்கள் உங்கள் வீட்டில் உபயோகிக்கலாம் என்பதுதான். அதிகமாக இஸ்லாமிய கல்வியை போதிக்கும் முறைகளையே இங்கு காண முடியும் என்றாலும் இதே வழிமுறைகளை உபயோகித்தோ அல்லது தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்தோ எல்லா குழந்தைகளுக்கும் தாயே நல்ல கல்வி அளிக்க இயலும் என்பதே உண்மை. இதற்கென்று தனியாக படிப்போ தகுதியோ தேவையில்லை என்பதும் நிதர்சன உண்மை. எல்லாம் நாம் பயன்படுத்தும் வழிமுறையில்தான் இருக்கின்றது. சரி, விஷயத்துக்கு வருவோம்.
நான் படித்ததெல்லாம் இந்தியாவில் மாநகராட்சி பள்ளியில்தான் என்றாலும், கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் சராசரி அளவில் வெறும் மனப்பாடம் செய்வதையும், தகவல் களஞ்சியமாக மாற்றுவதற்கே தவிர பிள்ளைகளுக்கு வேறு எதனையும் சொல்லித் தருவது இல்லை என்பதே என் வாக்கு. இல்லை என்று வாதிடுபவர்கள் சமீபத்தில் வெளி வந்த ஆமீரின் 'தாரே ஜமீன் பர்' படத்தை ஒரு தடவை பாருங்கள். அதன் பின் அதைப் பற்றி விவாதிக்கலாம். இந்த பிரச்சினை இந்தியா போன்ற வளரும் அல்லது வளர்ச்சி அடையாத நாடுகளுக்கே அன்றி இப்பொழுது அதிகமாக வேலை விஷயமாக அயல் நாடுகளில் வாழ்பவர்கள் இதைப் பற்றி யோசிக்க வேண்டியது இல்லை என்றால் மீண்டும் கூறுகின்றேன், கூகுள் மாமாவையே கேட்டுப் பாருங்கள் ஒவ்வொரு நாட்டின் கல்வி திட்டமும் எப்படி உள்ளது என.
உதாரணமாக, நாம் குழந்தைக்கு நம்மை மற்றும் சகல் ஜீவராசிகளைப் படைத்தது இறைவன் என கூறி வைப்போம் ஆனால், பள்ளிகளில் டார்வின் தியரி கட்டாய பாடம், அதைப் படித்து மனப்பாடம் செய்து தேர்வில் சரியாக எழுதினால் மட்டுமே குழந்தை அடுத்த வகுப்பிற்கு போக முடியும். இந்த சூழ்நிலையில் குழந்தைக்கு எவ்வாறு படைப்பின் அருமையை விளக்குவீர்கள்?
இன்னொரு உதாரணம் சொல்லுகின்றேன். இந்தியா உள்பட எல்லா நாடுகளிலும் தற்போது 'DRUG FREE ZONE' என்று போர்டு மாட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. தங்கள் பிள்ளை படிக்கும் பள்ளி உண்மையில் 'DRUGS FREE'யா? அல்லது மேற்பூச்சா என்பதை எப்படி பரிசோதிப்பீர்கள். அங்கு படிக்கும் பிள்ளைகள் உங்கள் பிள்ளையை தப்பான வழிக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதை எப்படி உறுதி படுத்துவீர்கள்?
இன்னும் சில சகோதர சகோதரிகளின் வாதம் என்னவெனில் மற்ற பிள்ளைகளுடன் பின்பு எப்படி பழகுவார்கள்? குழந்தைகளுக்கு தீயது எது என்று காட்டாவிட்டால், நல்லதின் தாக்கம் அவர்களுக்கு எப்படி புரியும் என்பது. அவர்களுக்கு என்ன சொல்வது? குழந்தைகள் மாசு மருவற்ற உள்ளத்தோடு பிறக்கின்றார்கள். தொடக்ககாலத்திலேயே அவர்களுக்கு நல்லதை காண்பித்து, பழக்கி விட்டால் பின்பு தீயதை காண நேரும்போதும் சரி அதை கடந்தே ஆக வேண்டிய சூழ் நிலையிலும் சரி அவர்களின் உறுதி அழியாது. ஆனால் தொடக்கத்திலேயே அவர்களுக்கு தீயதை பழக வேண்டிய சூழ்நிலையை நாமே உருவாக்கிக் கொடுத்தால்?
இளம்பிஞ்சுகளை தங்களின் உடல் பசிக்காக உபயோகிப்பதும் பல பள்ளிகளில் நடக்கின்றது. நாம், நம் பிள்ளைகளைவிடவும் அயலார்மீது அதிக நம்பிக்கை வைத்து நம் பிள்ளைகளை அவர்களின் சொல்படி நடக்குமாறு பணிக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் பிள்ளைகள் யார் மீது நம்பிக்கை வைப்பர்? பின் வளர்ந்தபின் அதன் தாக்கம் யார் மீது வீழும்?
இன்னும் பல விவாதங்களை காணலாம் எனினும் மேலும் உங்களின் பல கேள்விகளுக்கு கூகுளில் தேடுவதாலேயே நிறைய விடைகள் கிடைக்கும். அடுத்த பதிவில் இது போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் இன்னும் '' பற்றி புரிந்து கொள்ள தேவையான தகவல் வலைகளையும் கொடுக்கின்றேன், இன்ஷா அல்லாஹ்.

Subscribe to:
Posts (Atom)