அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்,
இன்றுடன் ஒமர் 10 சூறா / குர்’ஆன் அத்தியாயங்கள் மனனம் செய்து முடித்தாயிற்று. மனதிற்கு மிக மிக சந்தோஷமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மூன்று வயதாகிவிடும். அதற்குள் இவ்வளவு மனனம் செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கே புகழனைத்தும்) என்பதை தவிர இவ்வேளையில் எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
இந்த வீடியோக்கள் முன்னமே பதிவு செய்தவை. எனவே அத்தனை சூறாக்களும் இதில் இல்லை. இன்னொருமுறை அனைத்தையும் பதிவு செய்ய முயல்கிறேன், இன்ஷா அல்லாஹ். ஒமருக்காக து’ஆ செய்யவும்.
ஒமருக்கு தெரிந்த சூறாக்கள்
பாங்கும் கூறுவதுண்டு. தன் தந்தையுடன் போகும்போது தொழுகை முழுவதும் இமாம் ஜமா’அத்துடன் விட்டு விலகாமல் தொழுவதுமுண்டு (ஒன்றிரண்டு தடவை தவிர!!! )
இப்ப, பிரேக் .... :))
.
ஒமருக்கு தெரிந்த சூறாக்கள்
- அல் ஃபாத்திஹா
- அந் நாஸ்
- அல் ஃபலக்
- அல் இக்லாஸ்
- அல் மஸத்
- அந் நஸ்ர்
- அல் காஃபிறூன்
- அல் கௌஸர்
- அல் அஸ்ர்
- அல் மா’ஊன்
- சாப்பிடுவதன் முன்
- உடையணிவதற்கு முன்
- வாகனத்தில் போகும்போது
- றப்பனா ஆத்தினா
- வீட்டை விட்டு வெளியேறும் முன்
- தூங்கும் முன்
- தூங்கி எழுந்ததும்
- ரெஸ்ட்ரூம் செல்லும் முன் / பின்
பாங்கும் கூறுவதுண்டு. தன் தந்தையுடன் போகும்போது தொழுகை முழுவதும் இமாம் ஜமா’அத்துடன் விட்டு விலகாமல் தொழுவதுமுண்டு (ஒன்றிரண்டு தடவை தவிர!!! )
இப்ப, பிரேக் .... :))
.
அஸ்ஸலாமு அலைக்கும் அனிஷா! ஜுஜ்ஜு வீடியோ பார்த்தேன். மாஷா அல்லாஹ், அழகா மழலை மொழியில் ஓதுகிறார். 3 வது வீடியோவில் தொழப் போகிறார் என்று பார்த்தேன். ஆட்டம் போட்டுக் கொண்டே ஆரம்பித்ததும் இங்கு ஒரே சிரிப்பு :)) அப்படியே என் மாமா பேரன் மாதிரியே இருக்கார், பேச்சு உட்பட! ஜுஜ்ஜுவுக்கும் ஜுஜ்ஜுவின் குடும்பத்தாருக்கும் ;) எங்களின் துஆக்கள் எப்போதும் உண்டு.
ReplyDeleteஎன் மகன் இதுபோல் சின்ன வயதில் மழலையோடு ஓதிய துஆக்கள், சூராக்கள், நபிமார்கள் வரலாறுகளை வரிசையாக சொல்வது, இது ஹராம் அது ஹராம் என்று அவனுக்கு தெரிந்தவரை, ஆனா கரெக்டா சொல்வது அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்திருந்தேன் அனிஷா. தனி சிடியில் போடாமல் கம்ப்யூட்டரை மட்டும் நம்பி கொஞ்சம் அலட்சியமாக இருந்ததில் வைரஸ் வந்து அநியாயமா அபேஸ் பண்ணிடுச்சு :( ஏதோ ஒன்றிரண்டு மட்டும் சிடியில் இருந்ததா ஞாபகம்.
அடுத்த முறை நீங்க வீடியோ எடுக்கும்போது மைக்கை உங்களைவிட்டு சற்று நகர்த்தி வைங்க, கொஞ்சம் அதிருது :)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ஏற்கனவே இந்த வீடியோவை பார்த்து விட்டேன்
அவருடைய துள்ளல் அவுது என்று உதடுகளை குவித்து சொல்லும் அழகு
அல்ஹம்துலில்லாஹ்
கண்குளிர்ச்சி
தாய்தான் ஒரு குழந்தையின் முதல் ஆசான் என்பதை உங்களின் இந்த பதிவு தெளிவுபடுத்தகிறது. குழந்தை அனைத்து செல்வமும் பெற்று ஈருலகிலும் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteமாஷா அல்லாஹ்.உங்கள் மகனுக்கு எங்கள் துஆக்கள்.
சந்தோசமா இருக்குங்க.. குழந்தைக்கு வாழ்த்துக்கள்..!
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் தங்கை அன்னு
ReplyDeleteமாஷா அல்லாஹ், பையன் ஓதுவதை கேட்டு
ரெம்ப சந்தோஷம் சகோதரி. ஒமருக்கு என் சலாமும்
துஆவும்.
அன்னு அஸ்ஸ்லாமு அலைக்கும்
ReplyDeleteமாஷா அல்லா மாஷா அல்லா, புஜ்ஜு ஷேக் சூப்பரா ஓது ராரே.
என் பையன் போன வருடம் என் மாமியார் மாமனார் வந்த போது தான் என் பையன் குர் ஆன் முடித்தான், இப்ப ஊருக்கு போனபோது கூட சொன்னாஙக் குரல் ரொம்ப அருமையா சவுதியில் ஓத கேட்பது போல் இருக்கு என்று, இத பார்த்ததும் நாமும் ரெகார்ட் பண்ணி இருக்கலாமேன்னு தோணுது.
வா அலைக்கும் ஸலாம் அன்னு
ReplyDelete@அஸ்மா,
ReplyDeleteவ அலைக்கும் அஸ்ஸலாம். ஹெ ஹெ ஹெ... நடு நடுவில் எண்டெர்டெயின்மெண்ட்டும் தேவையல்லவா!! :) நானும் ரிக்கார்டு செய்ததும் யூடியுபிலும் பிக்காஸாவிலும் ஏற்றி விடுகிறேன். நிறைய ஃபோட்டோக்களை கம்பியூட்டர் தகராறால் இழந்த அனுபவம்தேன்!! மைக், கேமராவில் ஹேண்ட்ஸ் ஃப்ரீயாக உள்ளது. அதனாலத்தேன் இந்த பிரச்சினை. அடுத்த தடவை தூரமாக வைத்து பதிவு செய்ய முயல்கிறேன். இன்ஷா அல்லாஹ் :)
வருகைக்கும் து’ஆவிற்கும் மிக நன்றி :)
@ஹைதர் அலி பாய்,
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ றஹ்மதுல்லாஹ்,
பார்த்து, ரசித்து மறுமொழியிட்டமைக்கு மகிழ்ச்சி. தேவை, து’ஆ. :)
நன்றி :)
@சுவனப்பிரியன்,
சகோ, சரியா புரிஞ்சிருக்கீங்க. தாயைத்தான் ஒரு குழந்தை உலகில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து நம்புகிறது. அப்ப, நல்லதை நாம்தானே முதலில் சொல்லித் தரவேணும்??
தங்களின் து’ஆவிற்கும் நன்றி :)
@சுமறாஸ்,
வ அலைக்கும் அஸ்ஸலாம்.
தங்களின் முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி. தங்களின் தளமும் மாஷா அல்லாஹ் மிகுந்த பயனுள்ளாது. இன்ஷா அல்லாஹ் உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.
நன்றி :)
@ஆனந்திக்கா,
இத்தனை துருஅம் தேடி வந்து வாழ்த்தியதற்கு மிக மிக நன்றி :)
@ஆயிஷாக்கா,
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்.
அல்ஹ்மதுலில்லாஹ். தங்களின் து’ஆவிற்கு மிக மிக நன்றி :)
@ஜலீலாக்கா,
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ றஹ்மதுல்லாஹ்,
ஆஹா, ஊருக்கு வந்ததும் என் வலைக்கும் வருகை தந்துட்டீங்களா... என்ன சொல்ல உங்க அன்பை. என்னாலத்தேன் ஃபோன் பேசவே நேரம் கிட்டலை. எப்பப்ப முடியுதோ அப்பப்ப ரெக்கர்டு செஞ்சு வச்சுக்கணும் அக்கா. அதுவும் இல்லாம ஜுஜ்ஜூ எங்க அப்பா அம்மா முன்னாடி ஓத வெக்கப்படுவான், கேமரான்னா சந்தோஷம், அதனால அவங்களுக்கு காட்டவும் இதான் வழி.
வருகைக்கும் அன்புக்கும் நன்றி :)
குழந்தையாக இருக்கும்போதே நல்லவிஷயங்களை சொல்லிக்கொடுத்தால் அவர்கள்மனதில் நன்கு பதிந்து விடும்.
ReplyDeleteகுழந்தை சொல்வது இறைவனை சீக்கிரம் எட்டிவிடும். மிக அருமையாக இருந்தது
ReplyDeleteஅன்னு.வணக்கமும் வாழ்த்துகளும்.
அல்ஹம்துலில்லாஹ்..மாஷா அல்லாஹ்..பார்க்கவே புல்லரிக்கின்றது அனிஷா.மிகவும் சந்தோஷமாக உள்ளது மழலையில் தேன் குரலில் ஆயத்துகளும்,துஆக்களும் ஓதுவதை கேட்க.
ReplyDeleteDear sister Anisha,
ReplyDeleteAssalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
Masha'allah, a nice work !!!
May ALLAH(swt) protect him from the Shaythaan...
I think that every mother should take you as a good exemple !!!
Insha'allah, if i have child i'll definitely edducate like this...
May ALLAH(swt) bless you...Aamin....
Your sister,
M.Shameena
பெண்களிடம் மட்டும் வலிய வந்து வம்பிழுக்கும் ‘தமிழன்’ வீரருக்கு,
ReplyDeleteவாங்க. வாங்க. என் வலைப்பக்கத்தை உங்கள் வலை முகவரியிலும் குடுத்திருக்கீங்களா? அட...என்ன சொல்ல! ஃப்ரீயா விளம்பரம் செய்யறீங்க போல...ரொம்ப சந்தோஷம். :))))))
என்னுடைய ஆங்கில வலைப்பதிவிலும், அதற்கு முன் நீங்கள் காலடி எடுத்து வைத்த பதிவிலும், உங்களுக்காகவே ’ஸ்பெஷல் பின்னூட்டமிடும் சட்டங்கள்’ சிலவற்றை எழுதினேன். அதைப் படிச்சிட்டு வாங்க. மறுபடியும் பேசுவோம்.
மீண்டும், ஃப்ரீ விளம்பரத்துக்கு மிக்க நன்றி. :))
@லக்ஷ்மிம்மா,
ReplyDelete@வல்லிசிம்ஹன் அக்கா,
@ஸாதிகாக்கா,
@ஷமீனா,
பின்னூட்டங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், து’ஆக்களுக்கும் மிக மிக நன்றி :)
@ராசலிங்கம் சார்,
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மிக மிக நன்றி :)
இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteஅக்கா ரொம்ப அருமை.அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.
maasha ALLAH