October 21, 2010

தாய் எனும் வைரம் --3


அந்த சிறுவனின் வயது இரண்டோ மூன்றோதான். ஆனால் அவனின வருகை, சபையில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைக்கும். ஏன்? ஏனெனில் அவனுடைய 'அதப்'(Adaab - குணநலன்க‌ள்) அத்தனை அழகானது. எப்பொழுதும் மரியாதையுடன் எல்லோரையும் அழைப்பதும், அழைப்பிற்கு தாழ்ந்து பதில் சொல்வதும், நம்முடைய அகராதியில் சொல்ல வேண்டுமென்றால் ப்ளீஸ், தேன்க்யூ, மே ஐ?...போன்ற மதிப்பை ஏற்படுத்தும் சொற்களை உபயோகிப்பதும், அடக்கத்தை தன் செயல்களில் காட்டுவதாலும் அச்சிறுவனை ஊரே மெச்சியது. இந்த பாராட்டுக்கெல்லாம் உரிய அந்த சிறுவன் யார், இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹி).

அத்தனை சிறு வயதிலேயே அவர் ஊரே மதிக்கும், மரியாதை தரும், புகழும் சிறுவனாய் திகழ்ந்தது எப்படி? அவரின் நன்னடத்தையால். இமாம் அஹ்மதின் (ரஹி) தாய்க்கு தெரிந்திருந்தது, எல்லா 'இல்மு'க்கும்(அறிவு / ஞானம்) முன்னர் ஒரு குழந்தை கற்க வேண்டியது அதபே!! அதாவது நன்னடத்தையே. எனவே அத்தாயானவர்கள் இமாம் அவர்களுக்கு அதிகமாக குர்'ஆன் ஞானத்தையோ, அல்லது ஹதீத் ஞானத்தையோ அளிக்கவில்லை, மாறாக சாப்பிடும்போது, சபைக்குள் வரும்போது, பெரியவர்களை சந்திக்கும்போது என எல்லா இடங்களிலும் நன்முறையில் நடந்து கொள்வது எப்படி என்பதை நன்முறையிலும் அதிகமாகவும் கற்றுக் கொடுத்தார்.

ஒரு முறை இமாமவர்கள், அவர்களின் மிகச் சிறு வயதில் ஒரு சபையில் இருக்கும்போது ஒரு அரபி, அவரின் நண்பரிடம் கூறினார், நானும் என் குழந்தைகளுக்காக பெரும் பெரும் செலவெல்லாம் செய்து நல்ல நல்ல 'மு'அத்தபீன்'களைக் கொண்டு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்...என்றாலும் இந்த சிறுவனை (இமாம் அஹ்மது) போல அவர்களின் குணநலன்கள் இல்லை என்று.

அந்த காலங்களில் அரேபிய வழக்கப்படி 'மு'அத்தபீன்' எனப்படுபவர்களிடம் குழந்தைகளை அனுப்பி பாடம் படிக்க வைப்பதும், அல்லது 'மு'அத்தபீன்'களை வீட்டீலேயே வரவைத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதும் பொதுவான ஒரு செயல். யார் இந்த 'மு'அத்தபீன்கள்? 'அதப்' என்னும் வார்த்தையில் இருந்து தோன்றிய பெயரே அது. "அதபை சொல்லித் தருபவர்கள்" அதாவது குழந்தைகளுக்கு நன்னடத்தையையும், நல்ல குணநலன்க‌ளையும் சொல்லித்தருபவர்கள்.

இப்பொழுது புரிந்ததா அந்த அரபியின் வருத்தம். இன்னொன்றையும் உற்று நோக்கினால் புரியும். இமாமவர்கள் ஞானமெல்லாம் கற்று பெரிய இமாம் ஆகும் முன்னர் அவரும் ஒரு 'மு'அத்தபீன்' ஆகவே இருந்தார் என்றால் அது மிகையாகாது. யார்தான் விரும்ப மாட்டார், தன் பிள்ளையின் நற்குணங்களை ஊரே மெச்ச வேண்டும் என?

பற்பல இமாம்களின் சரித்திரத்தை படிக்கும்போது அவர்களின் வாழ்வையும், குணங்களையும், கொள்கைகளையும் கண்டு வியந்து போகிறோம். ஆனால் அதை கற்றுத்தந்த தாய்மார்களைப் பற்றி குறைந்த தகவலே நமக்கு கிட்டுகிறது. இப்படி, அவர்களின் பெயர் சரித்திரத்தில் தத்தம் பிள்ளைகளாலேயே இடம் பெறுகிறது. இங்கும் இமாம் அவர்களின் குணநலஙளில் சீரிய கவனம் செலுத்தியதாலேயே, அவர் ஞானமும் அதிகம் பெற்றார், ஞானமும், நன்னடத்தையும் ஒருங்கே அமைந்ததனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அசைக்க இயலா இடத்தை பெற்றார். எனவே தாய்மார்கள் சிந்திக்க வேண்டியது என்ன, உங்களால் மட்டுமே உங்களின் பிள்ளைகளின் வாழ்வை செப்பனிட முடியும். நேரம் வீணாவதன் முன், இன்றே, இப்பொழுதே, அதற்கான வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.

மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்.


.

10 comments:

 1. தாய் எனும் வைரத்தில் வரும் கட்டுரை அனைத்தும் முத்துக்கள்

  ReplyDelete
 2. நல்ல முயற்சி. பாராட்டுகள். இமாம் அவர்களை பற்றியும் நம் முன்னோர்களான பெரியோர்கள் பற்றியும் இன்னும் அதிகம் எழுதுங்கள்.

  ReplyDelete
 3. அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  //பற்பல இமாம்களின் சரித்திரத்தை படிக்கும்போது அவர்களின் வாழ்வையும், குணங்களையும், கொள்கைகளையும் கண்டு வியந்து போகிறோம். ஆனால் அதை கற்றுத்தந்த தாய்மார்களைப் பற்றி குறைந்த தகவலே நமக்கு கிட்டுகிறது. //
  உண்மையான வார்த்தை சகோதரி., அவ்வாறு அவர்களை இனங்காட்டும் இது போன்ற வரலாறுகளை நிறைய தாருங்கள்.

  ReplyDelete
 5. சகோதரி அன்னுவின் "தாய் தரும் கல்வி"

  சகோதரி அன்னு அவர்களே,உங்கள் பிளாக் சிறந்ததாக தேர்வு பெற்று பேனா முனை தளத்தில் இடம் பெற்றுள்ளது.இன்னும் ஊக்கமுடன் எழுதுங்கள்,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அன்னு பேனா முனை மூலம் இந்த் பிலாக் எனக்கு தெரிய வந்துள்ள்து இனி நேரம் கிடைக்கும் போது இஙகும் வருவேன், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. @நூருல் அமீன் பாய்,
  தங்களின் வருகைக்கும், பாரட்டுகளுக்கும் மிக்க நன்றி. இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகமாக எழுத முயற்சி செய்கிறேன். ஊக்கமளிப்பதற்கு நன்றி.

  @நீடூர் அலி பாய்,
  தங்களின் வருகைக்கும், ஊக்கமளிக்கும் மொழிகளுக்கும் மிக மிக நன்றி.

  @சித்ரா அக்கா,
  வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றி, இன்னும் தொடர்ந்து வரவும்.

  @குலாம் பாய்,
  இன்னும் தமிழாக்கப்படுத்தவும் ஒலிப்பேழைகளில் கிடைக்கும் பொக்கிஷங்களை இவ்வறு எழுத்து வடிவில் ஷேர் செய்யவும் விருப்பமே...எனினும் நேரமின்மை தடை செய்கிறது. து'ஆ செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ் இன்னும் முயற்சி செய்கிறேன். ஊக்கமளிப்பதற்கு நன்றி.

  @ஒருவனின் அடிமை பாய்,
  உங்களின் பதிவை படித்தேன். தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியதற்கு மிக மிக நன்றி பாய். உங்களின் ஊக்கத்தால் இன்னும் அதிகமாய் எழுத முயற்சிப்பேன், இன்ஷா அல்லாஹ். வருகைக்கும், பாரட்டுகளுக்கும் மிக்க நன்றி.

  @ஜலீலாக்கா,
  தங்களின் முதல் வருகைக்கு நன்றி. உங்கள் வருகை என்ன, உங்களிடம் நேரமிருந்தால் இதிலும் பதிவுகளை எழுத அழைக்கிறேன். உங்கள் வலைகளும் மிகுந்த சவாபை பெற்றுத்தருபவையே. மீண்டும் மீண்டும் வருக.

  ReplyDelete
 8. அன்னு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தெரிவு செய்த பேனாமுனைக்கும் வாழ்த்துக்கள்.ஜமாய்ங்க சகோதரி

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  ஆங்கிலத்துல புத்தகத்த பாத்தவுடனே பயந்துட்டேன்
  சரி நமக்கு ஒன்றும் புரியப்போவதில்லையின்னு
  உங்களுடைய தமிழ் விளக்கம் நன்றாக இருந்தது
  அப்படியே தமிழிலில் மொழி பெயர்த்து தர முடியுமா?
  என்னையே மாதிரி ஆங்கிலம் தெரியாதவர்களும்
  கொஞ்சம் அறிவ வளர்த்துக் கொள்ள உதவி செய்யுங்க

  நன்றி சகோதரி

  ReplyDelete
 10. @ஃபாத்திமாக்கா,
  நன்றிகள் உங்களுக்கும். :)

  @ஹைதர் அலி பாய்,
  இன்ஷா அல்லாஹ் நிறைய செய்ய ஆசையாய்தான் இருக்கு. ஆனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் முழு ஓய்வு தர வேண்டியிருக்கிறது வலைக்கு. இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நாடினால் இதை முயற்சி செய்வேன். நன்றி, தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி பாய்.

  வ ஸலாம்.

  ReplyDelete