September 24, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 4)

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு அன்பின் சகோதர சகோதரிகளே,

நீண்டதொரு இடைவேளைக்கு பிறகு தொடர்கின்றேன். மன்னிக்கவும். இந்த தொடரின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை படித்து விட்டீர்களா?



இந்த பாகத்தில் கர்ப்ப காலத்தில் சிசுவிற்கு தரப்படும், தர வேண்டிய, இன்னும் நம்மை அறியாமலே தந்து கொண்டிருக்கின்ற கல்வியைப் பற்றி காணலாம். இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், கரு தங்கிய பின் அதற்கென அதிகமதிகம் அல்லாஹ்விற்கு நன்றி கூர்வதும், அதிகமதிகம் திக்ரு ஓதுவதும் தாய்க்கும், பிள்ளைக்கும் நன்மை.

கர்ப்ப காலம் ஆரம்பித்ததை அறிந்த பின் செய்ய வேண்டியதில் முதலாவது எவ்வளவு இயலுமோ அவ்வளவு குர்‍ஆனிலும், இன்னும் பிற இஸ்லாமிய புத்தகங்களிலும், ஒளி / ஒலி வடிவங்களிலும் அவற்றை அதிகமதிகம் செவி மடுப்பதும் நாவில் சதா சர்வ காலமும் புழங்க வைப்பதுமே ஆகும். இதன் பாதிப்பு எவ்வளவு தூரம் என்பதற்கு எந்த அசாதாரண ஆன்மாக்களையும் தேட வேண்டாம். நம் வீட்டிலோ அல்லது நம்மை சுற்றியிருப்பரிடத்திலோ தென்படும் குழந்தைகளே போதும். உதாரணத்திற்கு சில குழந்தைகள் ஒரு நடிகருக்கோ அல்லது ஒரு சீரியல் நாடகத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட திரைப்பட பாட்டுக்கோ தனிச்சையாய் சில ரெஸ்பான்ஸ் காட்டு, அதற்கு பிடித்திருக்கின்றது என்பதை குறிப்பிடும். என்னுடைய ஒன்று விட்ட சித்தப்பா மகன் இருவரை நான் பார்த்திருக்கின்றேன். எந்த விளையாட்டு எங்கே விளையாடிக் கொண்டிருந்தாலும் சன் டிவியில் செய்திகள் போடும் நேரம் சரியாக டீவி முன் ஆஜராகி விடுவர். அதில் அந்த செய்தி வாசிப்பவர் பெண்ணோ ஆணோ வந்து வணக்கம் கூறிய பின்னே கலைந்து செல்வர். ஏன் என நான் யோசித்துள்ளேன். பிறகு கூர்ந்து கவனித்ததில் இரு விஷயம் தெரிந்தது. எங்கள் சித்தப்பா மாலை வீட்டிற்கு வந்த பின் செய்திகளுக்கு மட்டும் ஒலி சற்று அதிகம் வைப்பதும், வீட்டில் மற்றனைவரும் சப்தங்களை குறைத்துக் கொள்வதும், இன்னும் எங்கள் சித்தி, பெண்களுக்கேயான நடைமுறையாக வாசிப்பவர் ஆணா பெண்ணா என காணவும், அவரின் சேலை அல்லது நகை போன்ற விஷயங்களை கவனிக்க சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்வதும் இயல்பாக எப்பொழுதும் நடக்கிறது. இதுவேதான் அவர் கருவுற்றிருக்கும் போதும் நடந்திருக்கும். கருவில் உள்ள சிசுவிற்கு தாயின் ஆர்வம் தனக்கும் ஒட்டியிருக்கும். மற்ற வேளைகளைப் போலல்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் வீட்டில் காட்டப்படும் முக்கியத்துவம் மனதில் நின்றிருக்கும். இது போல பல விஷயங்களை நீங்கள் பிள்ளைகளையும் அவர்களின் தாய் தந்தையரையும் கூர்ந்து கவனித்தால் புரியும். இதிலிருந்து இந்த பகுதியில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? கர்ப்ப காலத்தில் காட்ட வேண்டிய கவனம், நீங்க‌ள் எதையெல்லாம் அனுபவிக்கின்றீர்களோ, அதையெல்லாம் அந்த சிசுவும் அனுபவிக்கின்றது.

சரி, இனி எப்படி குழந்தையின் இந்த ஆர்வத்தை மேம்படுத்துவது? எந்த மாதிரி குழந்தையை நீங்கள் வளர்க்க விரும்புகின்றீர்களோ அதன் அடித்தளத்தை இட தங்களிடம் பத்து மாதம் உள்ளது. அதன் பின்னும் நேரம் உள்ளாது. ஆனால் இந்த பத்து மாதமானது, மிக மிக டெலிகேட்டானது. அப்பொழுதுதான் மெழுகப்பட்ட சிமெண்ட் தரையைப் போல. அதில் ஏதும் ஒடுக்கு விழுந்து விட்டாலோ, பள்ளமாகி விட்டாலோ மேற்பூச்சு செய்து மேல்வாரியாக சரி செய்யலாமே ஒழிய அதை முழுவதும் செப்பனிடுவது கஷ்டமே.

செயல் முறையில் இதை செவ்வனே செய்ய என்ன செய்யலாம்? வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருப்பவரா? அதிகம் குர்‍ஆன் ஓதுங்கள். சீடீயிலோ அல்லது டேப்பிலோ குர்'ஆனை ஒடவிட்டு கேளுங்கள், நஙு ஓதத் தெரிந்தவரா, பத்து மாதம் முழுதும் ஏதாவது சூறாவை மனனம் செய்யுங்கள். புதிய புதிய து'ஆக்களையும், திக்ருக்களையும் மனனம் செய்யுங்கள். இதுவரை குர்'ஆன ஓத தெரியாமலே காலம் கழித்து விட்டீர்களா இந்த பத்து மாதத்தில் ஒரு தடவையாவது தெளிவாய் ஓதுமளவிற்கு கற்றுக் கொள்ளுங்கள். இஸ்லாமிய கோட்பாடுகளைப் பற்றியும், இஸ்லாமிய கதைகளையும் உங்கள் குழந்தைக்கு நேரில் சொல்வது போல கதை சொல்லுங்கள். வேலைக்கு செல்பவர் ஆயினும் சிறிது நேரம் தனியே இதற்காக எடுத்துக் கொண்டு நல்முறையில் செலவிடுங்கள். இவையெல்லாம் போதனையல்ல. என் மகனை சுமந்த காலத்தில் நான் செய்து கண்ணாற அதன் பலனை காணும் பாக்கியம். நான் மட்டுமல்ல, இன்னும் பல தாய்மார்கள் இதனை கண்ணுற்று இருக்கின்றார்கள். இப்பொழுதும் என் மகன் (இரண்டரை வயதாகின்றது) மேலுக்கு சுகமில்லாமல் ஆகிவிட்டாலோ, ஏதாவது ஒரு காரணத்தினால் உடம்பும் மனமும் அமைதிலாமல் இருந்தாலோ, என்ன செய்தாலும், என்ன மருந்து போட்டாலும் கேட்க மாட்டான். வலியிலும், இயலா நிலையிலும் அரற்றிக் கொண்டே இருப்பான். குர்'ஆன் ஓதினாலோ அல்லது சீடீ ப்ளேயரில் ஓட விட்டாலோ மட்டுமே சற்று அமைதியுறுவான். அதுவும் அது நிற்காமல் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். என் கண்களில் அவனின் ஆர்வத்தையும் அல்லாஹ் அவனுக்கு தந்துள்ள மனதையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் ஒரு புறமும், அவனின் உடல் வருந்துவதைக் கண்டு மனவேதனையில் கண்ணீருமாக நிரம்பி இருக்கும். இந்த இரண்டரை வயதில் அவன் கற்றுக் கொண்டதும் கற்றுக் கொள்வதும், அவனின் ஆர்வமும் என்னுடைய இந்த வயதுடன் ஒப்பிடும்போது நான் சிறு எறும்பின் அளவும் இல்லை. எப்படி சாத்தியமானது? கர்ப்ப காலத்தில் செய்த து'ஆக்களும், அதன் மேலான அமலும், எல்லாவற்றிற்கும் மேலாய் அல்லாஹ் சுப்ஹானவத ஆலாவின் அருளுமே காரணம். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.


இந்த காலத்தில் தாய்க்கு மட்டுமே பங்கா, நாங்களெல்லாம் நற்கூலி சம்பாதிக்க வேண்டாமா என்று சகோதரர்களே எம்மை முறைக்காதீர்கள். உங்களுக்கும் சம பங்குண்டு இதில். எப்படி??

மாலை வியாபரமோ, வேலையோ முடித்து விட்டு வந்த பின்னோ..அல்லது இரவு தூங்கப் போகும் முன்னோ மேலுள்ள எல்லா வழிகளையும் நீங்கள் பின்பற்றலாம். தாயின் வயிற்றினருகில் அமர்ந்து அழகிய கிரா'அத்துடன் ஓதிக் காட்டலாம். அல்லது ஹதீத்துக்களிலிருந்தும் குர்'ஆனிலிருந்தும் நல்ல கதைகளைக் கூறலாம். இது ஏதும் செய்ய இயலாதவர்களாக எட்ட முடியா தூரத்தில் இருக்கின்றீர்களா, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இதை செய்யுங்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதன் பலனை தங்களுக்கு நிச்சயம் கண்ணாற, மனதார பார்க்கச் செய்வான். நினைவு செய்யும்போதெல்லாம் அதிகமதிகம் து'ஆ செய்யுங்கள், மறக்காமல்.

பத்து மாதத்தில் மிகவும் முக்கியமாக இஸ்லாத்தில் அல்லாத எந்த பித்‍அத்தையும் கிட்டே நெருங்காதீர்கள். நம்மில் பல பேருக்கு உள்ள சங்கடம் என்னவெனில், பித் அத் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அப்படியே தெரிந்து கொண்டாலும் தாய் தந்தைக்கோ அல்லது கணவனுக்கோ அல்லது அவரின் தாய் தந்தைக்கோ மறுத்து எப்படி இருப்பது?

இது இந்த கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும் கர்ப்ப காலத்தில் சண்டை சச்சரவுகள், அவை அளவில் சிறியனவோ, பெரியனவோ...தாய் மற்றும் சேய்க்கு ஆபத்தான விஷயங்கள். எனவே இதிலிருந்து மீள் ஓர் வழி சொல்கிறேன். (நினைவில் வையுங்கள். நான் ஆலிமோ, முஃப்தியோ அல்ல. ந'ஊதுபில்லாஹ்) எந்த செயலையும் செய்யும் முன் நபிவழியில் இதற்கு ஆதரமிருக்கிறதா என்று ஆராய்வது அவசியம். அதன்பின், அந்த செயல் கல்சுரலாக செய்யப்படுகின்றதா அல்லது அதிலும் சேர்த்தியில்லையா என்பதை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு, கர்ப்ப காலத்தில் எல்லாருடைய உடம்பும் ஒன்று போல இருக்காது. சில பேருக்கு உடையும், ஆபரணங்களுமே பாரமாய் தெரியும். அப்பொழுது கை நிறைய வளையல்கள் போட சொன்னாலோ, அல்லது தினமும் பூக்களால் அலங்கரித்துக் கொள்ள சொன்னாலோ....இது இஸ்லாத்தில் உள்ளதா என வாதம் செய்ய கிளம்பாதீர்கள். இது கர்ப்பஸ்த்ரீக்கு சந்தோஷத்தை அளிக்க நடைமுறையில் வந்துள்ள ஓர் செயல். தங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், யார் மனமும் நோகாதபடி நாசூக்காக தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே நேரம் தங்களுக்கு பின் விளைவுகள் ஏதும் ஏற்படாது என்னும் பட்சத்தில் மற்றவருடைய சந்தோஷத்தில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஏர்வாடி தர்காக்கும், நாகூருக்கும் போய் வர வேண்டுமென கட்டளைகளா. போய் வாருங்கள். அங்கிருப்பவர்களுக்கு சலாம் சொல்லுங்கள். மனதில் அல்லாஹ்விடம் மட்டும் அதிகமதிகம் தவ்பா செய்து அங்கே வழி தவறி ஷிர்க்கில் உள்ள எல்லோரையும் நல்வழிப்படுத்த து'ஆ கேளுங்கள். முடிந்தவரை சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் பொறுமையுடன் வாழ்வதை இப்பொழுதே உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாமிய கருத்தரங்களும், குர்'ஆன் மற்றும் ஹதீஸ் வகுப்புக்களும் ஆங்காங்கே நடந்து கொண்டேயுள்ளன. முடிந்தவரை அவற்றிலெல்லாம் கலந்து கொள்ளுங்கள். உங்களால் அமரவே முடியாது என்ற நிலை வந்தால் ஓரத்தில் படுத்துக் கொள்ளுங்கள். அல்லது சேரை விட்டுவிட்டு கீழே கால்கள் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள். ஏன் என்று கேட்டீர்களானால், அல்லாஹ்விற்காக அவனின் வேதத்தையும் அவனின் மார்க்கத்தையும் படிக்க சேரும் கூட்டத்தினர்க்கு மலக்குமார்களின் ஸ்பெசல் து'ஆ கட்டாயம் உண்டு. நீங்கள் அந்த வகுப்புகளில் சேர்ந்து ஆலிம் ஆகவிட்டாலும், அந்த கூட்டத்தில் இருந்த காரணத்திற்காக மலக்குமாரின் து'ஆவில் நீர் இணைவீர், தங்களின் செல்வங்களும். இன்னும் அதிகமான சாந்தியும் சமாதானமும் நற்பண்புகளும் உங்கள் குழந்தைகளிடம் நிலைக்கும்.


முடிவில் இன்னொரு விஷயத்தையும் நினைவில் வையுங்கள். நீங்கள் ஒரு பொருளையோ, வேலையையோ மன விரும்பி ஒன்றி செய்யாதவரை, தங்கள் குழந்தை அதை கற்றுக் கொள்ளும், கற்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். சட்டியிலில்லாமல் அகப்பையில் வராது!!

கர்ப்ப கால முடிவில்...தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்!!



.

6 comments:

  1. அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. என்னால் தொடர்ந்து வந்து கருத்து எழுத முடியலை என்றாலும் அப்பப்ப நீங்க கோர்த்து வைத்திருக்கும் முத்துச் சரத்தை பார்வையிட்டு விட்டு மகிழ்ந்து செல்வேன். வாழ்த்துகளுடன்!!

    ReplyDelete
  2. @ காதர் பாய்,

    நீங்க கண்டிப்பா பின்னூட்டம் போட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இந்த ஆக்கங்கள் தங்களுக்கு ஏதோவொரு வகையில் துணை புரிந்தாலே போதுமானது. அல்லாஹ்விடம் கண்டிப்பாக எங்களுக்காக து'ஆ செய்யவும். உங்களின் கருத்து மிகவும் மகிழ்ழ்ச்சியை தந்தது. நன்றி பாய்(Bhai/Brother).

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை .மிகவும் அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  4. @நீடூர் அலி பாய்,

    நன்றி, தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும். ஜஸாகல்லாஹு ஹைர்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்
    சுப்ஹானல்லாஹ் ஆச்சரியமா இருக்கு உஙகள் தக்வாவுக்கு கிடைத்த அருள்கொடை உங்கள் மகன்
    நீங்களும் சின்னவயசாத்தான் இருப்பீர்கள் இந்த வயதில் உங்களில் ஒரு தெளிவு என்னை ஆச்சரியப்பட வைக்கிறது எல்லா புகழும் வல்ல ரஹ்மானுக்கே

    ReplyDelete
  6. @தாஜ் பாய்,
    எல்லாமே அல்லாஹ்வால் முடிவு செய்யப்பட்டவையே...ஆயினும் எந்த 'கத்ரை'(qadr) நாம் செலெக்ட் செய்கிறோம், அதன் மேல் அமல் செய்கிறோம் என்பதே நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கிறது. (அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்)
    :)
    என் மகனுக்காக து'ஆ செய்யவும். நன்றி.

    ReplyDelete