January 26, 2011

ஜுஜ்ஜுவின் வளர்ச்சி

அல்ஹம்துலில்லாஹ். மீண்டும் வலையில் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சியே. இன்னொரு செல்வத்தின் வருகயை ஒட்டி என்னால் சில காலம் எழுத முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். புதிய நபர், இப்றாஹீம் முஹம்மது அப்துர் ரஹீமிற்கு து’ஆ செய்யவும்.


ஜுஜ்ஜு தினம் தினம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்கிறான். ஆனால் அவனின் அறிவுப்பசிக்கு அந்த வேகத்தில் தீனியிட முடிவதில்லை சில நேரம், கைப்பிள்ளையையும் கவனிக்க வேண்டி இருப்பதால். து’ஆ செய்யவும்.

gudli.com மற்றும்  starfall.com  மட்டுமே அவனுக்கு நாள்தோறும் நிறைய பழக, படிக்க கற்றுத்தருகிறது. அவனின் கற்கும் வேகமும் அதிகம். மகிழ்ச்சியாய் உள்ளது அவனின் அறிவை கண்டு, அதே நேரம் சிறு பிள்ள என்னும் பருவம் வேகமாய் மறைகிறதே என்றும் கவலை. அல்லாஹு த ஆலா போதுமானவன்.

போன வாரம் முதல் அவனின் வளர்ச்சியை குறித்து வைக்க ஆரம்பித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ், அரபி ஆகிய மூன்றிலும் அத்தனை எழுத்துக்களும் நன்றாய் தெரிகிறது. ஆங்கில எண்களும் கிட்டத்தட்ட 50 வரை சொல்லுகிறான். விளையாட்டாகவே இத்தனையும் கற்றுக்கொண்டது சந்தோஷமே. போன வாரம் அவனின் வளர்ச்சியை ரெக்கார்டு செய்து வைக்கும் விதமாக சில வேலைகளை சேர்ந்து செய்தோம். அதன் புக்கைப்படங்கள் கீழே. து’ஆ செய்யுங்கள். புகைப்படங்களைக் கண்டு ஏதேனும் ஐடியா தேவைப்பட்டாலோ, கேள்வி இருந்தாலோ, உங்கள் குழந்தையிடமும் இப்படி செய்து பார்க்கவேண்டி இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

 A - Z வரை அவனின் கார்கள் கொண்டு ஜோடித்து பார்த்தோம்.  

ஒரு வீட்டை வரைந்து அதனை சுற்ரி பல்வேறு கலரில் நான் பொருட்களை வரைந்தால் அந்தந்த கலர் ஸ்கெட்சை கொண்டு கோடிட வேண்டும்.
ஒன்றிரண்டை தவிர மற்றதெல்லாம் அவனே சத்தமாக அந்த நிறத்தின் பெயரை கூறி கோடுகள் இட்டான்.

 A, B, C, D எல்லா எழுத்துக்களையும்  UPPER CASE மேலேயும், LOWER CASE  கீழேயும் எழுதினால் அந்தந்த எழுத்துக்களுடன் சரியாக இணைக்க வேண்டும்.

அதையும் எல்லா 26 எழுத்துக்களுக்கும் சரியாக செய்தான். 
பின்னர் எனக்கு தெரிந்த கலையை கொண்டு நான் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருளை வரைந்து அவை என்ன என்ன என்று கூறிய பின் அதையும் சரியாக இணைத்தான்.
பின்னர் Play Dough  கொண்டு சில பொருட்களை செய்தோம். அதுவும் அவனுக்கு பிடித்து போனது.


இனி அடுத்த வாரம் மற்ற மொழிகளையும் சோதித்து பார்க்க வேண்டும். அதுவரை, தேவை து’ஆ.

வ ஸலாம்.


15 comments:

 1. மாஷா அல்லா
  மிகவும் அறிவில் சிறந்ந்து விளங்க என் துஆக்கள்.
  என் பெரிய பையனும் இப்படி தான்
  தமிழும் கற்று கொடுத்துட்டீங்களா. சூப்பர்.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  சகோ. அவர்களுக்கு
  /// புதிய நபர், இப்றாஹீம் முஹம்மது அப்துர் ரஹீமிற்கு து’ஆ செய்யவும்.//

  ”எங்கள் குழந்தைகளை எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக” அல்குர்ஆன்:25:74

  வாழ்த்துக்கள் சகோதரி மேலேயுள்ள குர்ஆனில் வரக்கூடிய துஆ வை ஒதிக் கொள்ளுங்கள்.

  நானும் இப்றாஹீம் முஹம்மது அப்துர் ரஹீமிற்கு
  இறைவனிடம் துஆ செய்கிறேன்(அல்லாஹ் போதுமானவன்)

  ReplyDelete
 3. @ஜலீலாக்கா,
  அல்ஹம்துலில்லாஹ், உங்க து'ஆவிற்கும், வாழ்த்துக்களுக்கும்.
  தமிழ்ல உயிரெழுத்து மட்டும்தான் தெரியும் இன்னமும் மெய்யெழுத்து, உயிர்மெய் கற்றுத்தரலை. து'ஆ செய்ங்க. :)

  @ஃபாத்திமாக்கா,
  ஜஸாகுமுல்லாஹு க்ஹைர், தங்களின் அன்பிற்கும், வாழ்த்திற்கும். :)

  @ஹைதர் அலி பாய்,
  வ அலைக்கும் அஸ்ஸலாம் வறஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு,
  இன்ஷா அல்லாஹ் அந்த து'ஆவை மனனம் செய்கிறேன், உங்கள் அன்பிற்கும், வருகைக்கும் நன்றி.:)

  ReplyDelete
 4. Assalamu alaikum wrb.. ennaalaa innum eludha mudila! romba tiring a iruku.. my son Hamdan is 4 months old, alhamdhulillah..

  I am really interested in home schooling.. Can I have ur mail id please?

  ReplyDelete
 5. மாஷா அல்லாஹ்...

  ரொம்ப அருமை அன்னு

  நானும் முயற்சித்து பார்க்கிறேன் (எத்தன வயசுல இருந்து சொல்லிக் கொடுக்குறீங்க?)

  ReplyDelete
 6. @ நாஸியா,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மதுல்லாஹி வ பறகாத்துஹு,
  மெயில் அனுப்பிட்டேன். :)
  என்னால முடிஞ்ச வரை சந்தேகங்களுக்கு பதில் தர முய்ற்சிக்கிறேன். :)

  @ஆமினா,
  வாழ்த்துக்களுக்கு நன்றி.
  இதுவரை நான் அவனுக்கு உக்கார வச்சு புரிய வச்சது கம்மி. அவன் நல்லா உக்கார ஆரம்பிச்ச பருவத்திலருந்து சாப்பிடற நேரத்துல யூடியூப் மூலமா 3 மொழியிலும் சின்ன சின்ன வீடியோக்கள் பார்க்க விட்டேன். அதில் அவன் ஆர்வம் அதிகமாகி ரிபீட் செய்ய முயற்சித்ததிலேயே அவனின் ஆர்வம் புரிந்தது. பின்னர் அதே எழுத்துக்களை மேகழின்களில், வெளியே போகும்போது விளம்பரங்களில் என இணைப்பு கொடுத்தோம், இதனால் ரீகால் செய்வது எளிதானது. முயற்சித்து பாருங்களேன்??

  ReplyDelete
 7. குழந்தையை, நல்லா ட்ர்ரெயின் பண்ரீங்க. நீங்களும் ஒரு குழந்தையாவே மாறிட்டீங்க. நல்லா இருக்கு.

  ReplyDelete
 8. வாவ்.. எல்லா படங்களும் அருமைங்க.. குட்டிக்கு அன்பான வாழ்த்துக்கள்.. :-))

  ReplyDelete
 9. பாராட்டுக்கள். 'து'ஆ என்றால் பிரார்த்தனைதானே. அப்படியென்றால் நானும் உங்கள் குழந்தைகளுக்காக 'து'ஆ செய்கிறேன்.

  ReplyDelete
 10. @லக்‌ஷ்மிம்மா,
  நன்றிம்மா.. :)

  @ஆனந்திக்கா,
  நன்றிக்கா. :)

  @கந்தஸ்வாமி சார்,
  கண்டிப்பாக, மிக மிக நன்றி சார். :)

  ReplyDelete
 11. சகோ. அன்னு!

  இப்றாஹிம் முகமது அப்துல் ரஹீம் மற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் என்றென்றும் தந்தருள்வானாக!

  ReplyDelete
 12. @அன்னு said...//
  ஆமாங்க எங்கு சுற்றியும் ரங்கனைச் சேவி என்பதைப் போல எங்கு சென்றாலும் எப்போது கோவை செல்வோம் என்று தான் நினக்கத் தோன்றும்.
  கோவை வந்தால் கணபதியிலிருந்து மெயில் அனுப்புங்கள். உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டேன். மிகச் சிறப்பானவை.நன்றி.

  ReplyDelete
 13. சுவனப்பிரியன் பாய்,
  தங்கள் து’ஆவிற்கும், வருகைக்கும் மிக மிக நன்றி :)

  இராஜராஜேஸ்வரி அம்மா,
  இன்ஷா அல்லாஹ் மெயில் அனுப்புகிறேன். தங்கள் நலத்தை கவனிக்கவும். :) நன்றி வருகைக்கும் படிஹ்த்டு, மறுமொழியிட்டதிற்கும் :)

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும்.
  மிக அழகான முயற்சி,
  நானும் இதேமாதிரிதான் குழந்தைங்களுக்கு சொல்லிக் கொடுப்பேன். உங்கள் மகனின் அறிவை அதிகப்படுத்துவானக.ஆமீன்

  ReplyDelete